என்னது 13 வயது சிறுமியைக் கர்ப்பமாக்கியது 10 வயது சிறுவனா ? தொலைக்காட்சி நேரலையில் பரபரப்பு !

Published on: January 24, 2020
---Advertisement---

8f2d0ccf7563dfabe1e52795a0143d56

ரஷ்யாவைச் சேர்ந்த தம்பதிகள் ஒருவர் தொலைக்காட்சி நேர்காணலின் போது தங்கள் 13 வயது சிறுமியை 10 வயது சிறுவன் ஒருவன் கர்ப்பமாக்கியுள்ளான் எனக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

ரஷ்யாவின் புகழ்பெற்ற தனியார் தொலைக்காட்சிக்கு தங்களது 13 வயது சிறுமியோடு வந்த பெற்றோர் தங்கள் குழந்தை கர்ப்பமாக இருப்பதாகவும் அதற்குக் காரணம் 10 வயது சிறுவன் ஒருவன் தான் எனவும் கூறினார். இதைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சியாகினர்.

10 வயது சிறுவனால் ஒரு பெண்ணைக் கர்ப்பமாக்க உடல் ரீதியாக முடியாது என்று மருத்துவர்கள் அடித்து சொல்ல, அந்த சிறுவனுக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த சிறுவனுக்கு அந்த தகுதிகள் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அந்த சிறுமியும் அவரது பெற்றொரும் சிறுவன்தான் கர்ப்பத்துக்குக் காரணம் என அடித்து கூறினர்.

இதையடுத்து இரு குடும்பத்தாரும் பேசி சமாதானமாக பாதிக்கப்பட்ட சிறுமியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என அச்சிறுவனின் பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால் அந்த சிறுமியின் கர்ப்பத்துக்கு சிறுவன்தான் காரணமா என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

Leave a Comment