மாதத் தவணையில் செல்போன் … ஆபாசப் பேச்சு ! அரிவாளோடு வந்து மிரட்டிய கணவர் !

Published on: January 24, 2020
---Advertisement---

1b4182733cc7450391a5b0e6085b14cd

தேனியில் பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்துக்கு அரிவாளோடு வந்து மிரட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், கம்பத்தில் இயங்கி வரும் பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்தில் மாதாந்திர தவணைக்கு கடன் வாங்கி பெண் ஒருவர் செல்போன் வாங்கியுள்ளார். அதற்கான தவணைகளை சரியாக தராததால் அந்த நிறுவனத்தில் இருந்து அழைத்து ஊழியர்கள் கடுமையாகப் பேசியுள்ளனர். அதில் ஒரு ஊழியர் அந்த பெண்ணை ஆபாசமாகத் திட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனை அந்த பெண் தன் கணவரிடம் சொல்ல, அவர் கோபத்தில் அரிவாளோடு பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்துக்கு வந்துள்ளார். அவரை அந்த கோலத்தில் பார்த்து மிரண்டு போன ஊழியர்கள், அவரிடம் பேச்சு கொடுத்து வெளிப்புறக் கதவை சாத்தியுள்ளனர். போலிஸுக்குத் தகவல் கொடுக்க, அவர்கள் வரும் முன்னரே அந்நபர் பின்வாசல் வழியாக தப்பித்துச் சென்றுள்ளார்.

இந்த சம்பவத்தால் அந்த இடத்தில் பரபரப்பான சூழல் உருவானது.

Leave a Comment