லேகியம் சாப்ட்டு உக்கார முடியல…! நிக்க முடியாம தவிக்கும் ஜீவா..

Published on: March 24, 2022
jiiva_main_cine
---Advertisement---

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி செளவுத்ரியின் மகன் ஜீவா தமிழ் சினிமாவில் ஆசை ஆசையாய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே துறுதுறுனு நடிப்பை வெளி காட்டி ரசிகர்களை கவர்ந்தார். நடித்த புதிதில் யாரும் செய்ய துணியாத டஃப் கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.

jiiva1_cine

இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான ராம் திரைப்படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனாக நடித்து மிகச் சிறந்த நடிகராக பல விருதுகளையும் வென்று இருப்பார். கற்றது தமிழ் படத்தில் ஒரு வேலையில்லா பட்டதாரியாக தாடியுடன் நடித்திருப்பார்.

jiiva2_cine

முகமூடி, ரௌத்திரம் போன்ற படங்கள் இவரின் நடிப்பிற்கான அடையாளமாக இருந்தது. ஏகப்பட்ட படங்கள் இவரின் கெரியரில் நல்ல பெயரை பெற்றுத்தந்தது. காமெடியிலும் வெளுத்து வாங்கும் இவர் கலகலப்பு 2, படத்தில் மிர்சி சிவாவுடன் கலக்கியிருப்பார்.

jiiva3_Cine

இன்னும் சில படங்கள் கையில் வைத்திருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் கிரிக்கெட் ஆடை அணிந்தவாறு பறக்குற மாதிரியான போஸில் பட்ட பாக்கியம் பழனி லேகியம் என காமெடியாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment