என் கணவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார் – வழக்குத் தொடுத்த பெண்ணுக்கு நீதிமன்றம் தந்த தீர்ப்பு !

Published on: January 24, 2020
---Advertisement---

de5fec82f7bbdce6c7389ad5beda3db5

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் தன்னுடைய அனுமதி இல்லாமல் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடுத்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கு திருமனத்துக்குப் பிறகுதான் தன்னுடைய கணவர் ஒரு திருடர் என்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவரைப் பிரிந்து டெல்லியில் சென்று வாழ்ந்துள்ளார். ஆனாலும் அவரை விடாத கணவர் டெல்லிக்கு சென்று அவரை சமாதானப்படுத்தி ஒன்றாக வாழ ஆரம்பித்துள்ளார்.

ஆனாலும் அவரது திருட்டுக் குணம் அவரை சும்மா இருக்கவிடவில்லை. வீட்டில் இருந்த 2 லட்ச ரூபாயைத் திருடிக்கொண்டு சென்றுள்ளார். இதனால் கணவர் மீது மனைவி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஜாமீனில் வெளிவந்து தன்னுடைய மனைவி வீட்டுக்கு சென்று அவரது அனுமதி இல்லாமல் அவரைக் கட்டாயப்படுத்தி அவரிடம் பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளார்.

இதையடுத்து அந்த பெண் கணவர் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக போலீஸில் புகார் கொடுத்தார். இது சம்மந்தமான வழக்கில் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில் ’ 2016-ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி பலாத்காரம் நடந்ததாக பாதிக்கப்பட்ட பெண் சொல்லியுள்ளார். ஆனால் அதற்கு ஒரு வருடம் முன்பாக அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. அதனால் இந்த வழக்கில் பாலியல் பலாத்கார பிரிவின் கீழ் தண்டனைக் கொடுக்க முடியாது’ எனக் கூறியுள்ளனர்.

Leave a Comment