தனுஷ்-சன்பிக்சர்ஸ் படத்தின் இயக்குனர் இவர்தான்: புதிய தகவல்

Published on: January 24, 2020
---Advertisement---

b77782a51f9ef6de392aef6d3703fd80

தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அவர் தற்போது மாரிசெல்வராஜ் இயக்கிவரும் ’கர்ணன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நெல்லை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படமொன்றின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை தனுஷே இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் இயக்குனர் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ள

தனுஷ்-சன் பிக்சர்ஸ் இணையும் படத்தை இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே தனுஷ் நடித்த ’யாரடி நீ மோகினி’ என்ற ஹிட் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தேர்வு நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இரண்டாம் பாதியில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

மேலும் அடங்கமறு இயக்குனர் கார்த்திக் தங்கவேல், தனுஷிடம் ஒரு கதை கூறி இருப்பதாகவும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment