உச்ச நடிகருக்கு கொக்கி போட்ட இளம் நடிகை…. கண்டுகொள்ளாமல் நழுவிய ஹீரோ….!

Published on: March 25, 2022
tamil actress
---Advertisement---

சினிமாவில் பல நடிகர் மற்றும் நடிகைகள் தங்களுக்கு பிடித்த பிரபலங்களின் பெயரை குறிப்பிட்டு அவருடன் ஒரு படமாவது இணைந்து நடித்துவிட வேண்டும் என தங்களின் விருப்பத்தை வெளிப்படையாகவே கூறியுள்ளார்கள். இதில் சிலரின் ஆசை நிறைவேறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது இளம் நடிகை ஒருவர் உச்ச நடிகருடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என கடுமையாக முயற்சி செய்து வருகிறாராம். அந்த நடிகை வேறு யாருமல்ல அக்கட தேசத்தில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் பயங்கர பிரபலமாக வலம் வருபவர் தான் அந்த நடிகை.

தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அந்த நடிகைக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகி உள்ளது. இதுவரை தெலுங்கு சினிமாவில் மட்டுமே நடித்து வந்த அந்த நடிகை தற்போது தமிழ் மொழி படங்களில் நடிக்க அதிக கவனம் செலுத்தி வருகிறாராம்.

tamil actress

அதுமட்டும் அல்ல தமிழில் அந்த முன்னணி நடிகருடன் தான் நடிக்க வேண்டும் என மனதில் ஒரு கனவு கோட்டையே கட்டி வைத்துள்ளாராம் அந்த நடிகை. அதற்காக தான் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் சரி சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அந்த நடிகரை பற்றி புகழ்ந்து பேசி வருகிறாராம் நடிகை.

ஆனால், நடிகரோ அவரை கண்டுக்கொள்ளவே இல்லையாம். இதனால் தற்போது நடிகருடன் ஒரு படத்தில் நடித்தால் போதும் அதற்காக சம்பளம் இல்லையென்றாலும் பரவாயில்லை என்று மேலாளர்களிடம் நடிகை சொல்லி வருகிறாராம். அந்த நடிகருடன் நடிக்க இவர் இவ்வளவு தூரம் இறங்கி வந்துள்ளது கோலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment