தியேட்டருக்கு செல்லுங்கள்… சில்லறையை சிதறவிடுங்கள்  ! சைக்கோ படத்தின் டிவிட்டர் விமர்சனம் !

Published on: January 24, 2020
---Advertisement---

343dabec214e405e16561cafe96d8b8e

சைக்கோ படத்தின் முதல் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் அந்த படத்தைப் பற்றி புகழ்ந்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹையாத்ரி, நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சைக்கோ. இளையராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் பாடல்கள் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் இந்த படம் இன்று வெளியாகியுள்ளது. முழுப்படமும் பார்த்தவர்கள் மற்றும் முதல்பாதி பார்த்தவர்கள் படம் பற்றிய தங்கள் கருத்துகளை டிவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

அவற்றில் சில விமர்சனங்கள்

  • தயவு செய்து உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லாதீர்கள். இந்த படம் பெரியவர்களுக்கானது.
  • இந்தியாவின் மிகச்சிறந்த திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. படம் முடிந்த பின்னர் ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டுகின்றனர்.
  • மிஷ்கின் தனது மாஸ்டர்பீஸ் திரைப்படத்தை எடுத்துள்ளார். தரமான த்ரில்லர் திரைப்படம் #சைக்கோ
  • ஹிட்ச்காக்கின் படங்களைப் போல சிறப்பாக உள்ளது.
  • மாஸ்டர் பீஸ் திரைபடம்… தியேட்டருக்கு செல்லுங்கள்… சில்லறையை சிதற விடுங்கள்

Leave a Comment