சிவாஜி ஸ்டைலில் பாரதிராஜா – தலைப்பை மாற்றியது ஏன் ?

Published on: January 24, 2020
---Advertisement---

fc79a6c0388786ea09545f0f70538bc5-2

பாரதிராஜா தனது இயக்கத்தில் உருவாகிய ஓம்(ஓல்டு மேன் ) படத்தின் தலைப்பை மீண்டும் ஒரு மரியாதை எனப் பெயர் மாற்றம் செய்துள்ளார்.

பாரதிராஜா நீண்ட இடைவெளிக்குப் பின் தான் இயக்கப் போகும் படத்தின் அறிவிப்பை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டார். அந்த படத்துக்கு ஓம் (ஓல்டுமேன் ) எனப் பெயரிட்டு இருந்தார். இந்த படம் சில வருடங்களுக்கு முன்பாகவே தயாராகி விட்டாலும் ரிலிஸாகாமல் இருந்தது. இப்போது இந்த படத்தின் பெயரை மீண்டும் ஒரு மரியாதை என மாற்றி அடுத்த மாதம் 21 ஆம் தேதி ரிலிஸ் செய்ய உள்ளார்.

பாரதிராஜா, நட்சத்திரா. ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் வயதான ஒரு முதியவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் இடையிலான நட்பைப் பற்றிய கதை என சொல்லப்படுகிறது. இதேப் போன்ற கதைக் களத்தில் பாரதிராஜா ஏற்கனவே முதல் மரியாதை என்ற படத்தை சிவாஜியை வைத்து இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment