இவனுக நமக்கு தரமாட்டானுக.! இந்த திமிர் பேச்சு தான் சிம்பு ஸ்டைல்.!

Published on: March 29, 2022
---Advertisement---

தமிழ் சினிமாவில் இவரை விட அதிகமாக சர்ச்சைகளில் சிக்கியவரை காண்பித்தால் அவருக்கு லைப் டைம் செட்டில்மென்ட் என்று கூட சொல்லிவிடலாம். அந்தளவுக்கு சர்ச்சைகளை சந்தித்தவர் சிம்பு. ஆனால், அதனை மறக்கடிக்கும் அளவுக்கு கம்பேக் ஹிட் கொடுக்கவும் தெரியும் என மாநாடு மூலம் நிரூபித்து விட்டார்.

சிம்பு தன் மனதில் பட்டத்தை அப்படியே பேசக்கூடிய நபர். அதன் காரணமாகவே அவர் நிறைய சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். உண்மையில் தமிழ் சினிமாவில் சகலமும் அறிந்த நபர்களில் முக்கியமானவர் சிம்பு. நடப்பு சினிமா உலகில் அவர் ஸ்டெடியாக இருந்திருந்தால் இந்நேரம் அவர் விஜய், அஜித், சூர்யாவுக்கு அடுத்து வந்திருப்பார்.

அவர் ஒரு பேட்டியில் குறிப்பிடுகையில், நான் மிகவும் வருத்தப்பட்டேன் எப்போது என்றால் , நான் மன்மதன் படத்தில் இரண்டு வேடத்தில் நடித்து இருந்தேன். அதில் மொட்டை கதாபாத்திரத்தில் உண்மையாக நடித்து இருந்தேன். ஆனால் அந்த வருடம் எனக்கு எந்த விருதும் வரவில்லை.

இதையும் படியுங்களேன் – அவருக்கு ஒன்னுனா கமல் துடிச்சு போயிருவாராம்.! யார் அந்த ‘அவர்’?

அந்த வருடம் தான் மன்மதன், 7ஜி ரெயின்போ காலனி எனும் சூப்பர் ஹிட் ஆல்பம் கொடுத்திருந்தார். ஆனால், யுவுனுக்கும் எந்த விருதும் கொடுக்கவில்லை. அதற்கு அடுத்து எனக்கு பழகிடுச்சி. விண்ணை தாண்டி வருவாயா படத்தின் போது நான் எந்த விருதையும் எதிர்பார்க்கவில்லை. எப்படியும் இவனுக நமக்கு தரமாட்டானுக அதனால் அந்த விருதுகளை நாம் எதிர்பார்க்கக்கூடாது. என்ற முடிவுக்கு வந்துவிட்டேன் என கூறியிருந்தார்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment