
வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இயக்குனராக அறிமுகமாகி இன்று வரை முன்னணி இயக்குனர் பட்டியலில் இருப்பவர் சுசீந்திரன். இவர் விஜய் படத்தை இயக்க ஒரு கதை கூறியதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் இன்று காலை அவர் வாக்கிங் சென்றபோது திடீரென ஒரு வாகனம் அவர் மீது மோதியதாகவும் இதனால் அவருடைய கை எலும்புகள் முறிந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சுசீந்திரன் இன்னும் மூன்று வாரங்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தெரிகிறது
சுசீந்திரனுக்கு ஏற்பட்ட விபத்து குறித்து அறிந்ததும் முன்னணி இயக்குனர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் மருத்துவமனையில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
வெண்ணிலா கபடிக்குழு’, நான் மகான் அல்ல, ராஜபாட்டை, பாண்டியநாடு, பாயும் புலி, ஜீனியஸ், கென்னடி கிளப் உள்பட பல திரைப்படங்களை இயக்கியுள்ள இயக்கத்தில் உருவான சாம்பியன்’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.
Director #Suseenthiran met with an accident during his morning walk today. Laser operation treatment will be done for him as his hand got fractured while a vehicle dashed him. Doctors said that he must take 3 weeks rest to get cured completely. pic.twitter.com/r4h8t1DQAT
— Johnson PRO (@johnsoncinepro) January 24, 2020