அதெல்லாம் நம்பாதீங்க., நான் சொல்றது தான் நிஜம்.! சூர்யா கொடுத்த வாக்குமூலம்.!

Published on: March 30, 2022
---Advertisement---

கடைசியாக வெளியான மூன்று படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் சூர்யா புது தெம்புடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். எதற்கும் துணிந்தவன் படத்தை தவிர்த்து மற்ற இரு படங்களும் OTTயில் வெளியாகியது.

தற்போது, இயக்குனர் பாலாவுடன் ஒரு படம் , இயக்குனர் வெற்றி மாறனுடன் வாடிவாசல் என இரு பட ஷூட்டிங்கிலும் ஒரே நேரத்தில் மாறி மாறி பயணித்து வருகிறார். தற்போது பாலா பட ஷூட்டிற்காக கன்னையாகுமாரி சென்றுள்ளார். அங்கு ஒரே கட்டமாக இப்பட ஷூட்டிங் நடைபெற உள்ளதாம்.

அது முடிந்த பிறகு வாடிவாசல் திரைப்படத்திற்கு உள்ளே வரவுள்ளார் சூர்யா. இதற்கிடையில் நேற்று இணையத்தில் பரவிய செய்தி என்னவென்றால், சூர்யா – பாலா திரைப்படம் தியேட்டரில் வெளியாகாதாம், அப்படம் நேரடி OTT யாக களமிறங்கும் என கூறப்படுகிறது என்று.

இதையும் படியுங்களேன் – அவசரப்பட்டு செல்லக்குட்டிய திட்டிடோமே.!? வருத்தத்தில் ரசிகர்கள்.!

ஆனால், அந்த வதந்திக்கு எதற்கும் துணிந்தவன் பட ரிலீஸ் சமயத்திலேயே சூர்யா விளக்கமளித்துள்ளார். டிவிட்டரில் அவர் ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது, அடுத்து பாலா, வெற்றிமாறன் படத்தில் அடுத்தடுத்து நடிக்க உள்ளேன். இரு படங்களும் வெவ்வேறு விதமான அனுபவத்தை தியேட்டரில் வெளியாகி ரசிகர்களுக்கு கொடுக்கும் என நம்புகிறேன் . என குறிப்பிட்டுள்ளார்.

அதனால்,தற்போது தான் சூர்யா ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். நமது ஆதர்சன நடிகரை திரையில் பார்த்து கொண்டாடலாம் என அடுத்த படத்திற்காக காத்திருக்கின்றனர்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment