ஒரு கோடிப்பே…. ஒரு கோடி…. நடிச்சது ஒரு படம் அதுக்குள்ள ஒரு கோடி சம்பளம் கேட்கும் நடிகை….!

Published on: April 3, 2022
amritha
---Advertisement---

திரையுலகில் ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களுக்கு சம்பளம் கிடைப்பது இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா கூட பல ஆண்டுகளுக்கு பின்னர் தான் முன்னணி நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்க தொடங்கினார்.

இப்படி உள்ள நிலையில் அறிமுகமான புதிதிலேயே அதிரடியாக சம்பளம் கேட்டு தயாரிப்பாளர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார் இளம் நடிகை ஒருவர். அவர் வேறு யாருமல்ல இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான ஜெயில் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமான நடிகை அமிர்தா தான்.

amritha

ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ள நிலையில் நடிகை அமிர்தா ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்பது தயாரிப்பாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இவருக்கு முன்பே திரையில் நுழைந்த பல நடிகைகள் இன்னும் லட்சங்களில் சம்பளம் வாங்கி வரும் நிலையில், அமிர்தாவின் இந்த போக்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இதுகுறித்து பேசியுள்ள அமிர்தா, “நான் சிவகார்த்திகேயன் மாதிரியான இளம் கதாநாயகனுடன் ஜோடி போட ஆர்வமாக இருக்கிறேன். அப்படி இளம் கதாநாயகனை என்னுடன் ஜோடி சேர்த்தால், சம்பளத்தை குறைத்து கொள்கிறேன்” எனவும் தயாரிப்பாளர்களுக்கு ஆஃபர் வழங்கி உள்ளார்.

இன்னும் கெரியரே தொடங்கல அதுக்குள்ள இவ்வளவு கெத்தா என அமிர்தாவை பலரும் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

Leave a Comment