Connect with us
ananya pandey

Cinema News

மூன்று வருட காதலை பிரேக் அப் செய்த இளம் நடிகை…. இதுக்கு எதுக்கு லவ் பண்ணனும்?

திரையுலகில் பல நடிகர் மற்றும் நடிகைகள் ஒருவருக்கொருவர் காதலிக்கின்றனர். இதில் சிலரது காதல் திருமணத்தில் முடிகிறது. பலரது காதல் அதற்கு முன்பாகவே முறிந்து விடுகிறது. இதுபோன்ற காதல் முறிவுக்கு பல காரணங்கள் உள்ளன. தற்போது இந்த வரிசையில் பிரபல இளம் பாலிவுட் நடிகை ஒருவர் இணைந்துள்ளார்.

அந்த நடிகை வேறு யாருமல்ல பாலிவுட்டில் பிரபல நடிகையாக உள்ள நிலையில் தற்போது தென்னிந்திய சினிமாவில் கால்பதித்துள்ள நடிகை அனன்யா பாண்டே தான். இவர் தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக லைகர் என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ananya pandey

பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் குத்துச்சண்டையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்டு 25ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ananya

இந்நிலையில் நடிகை அனன்யா பாண்டே குறித்த தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி நடிகை அனன்யா பாண்டேவும், நடிகர் இஷான் கட்டாரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்தனர்.

ஆனால், தற்போது இவர்கள் இருவரும் அவர்களின் காதலை பிரேக்கப் செய்துவிட்டார்களாம். மேலும் இருவருமே அவரவர் பாதையில் பயணிக்க முடிவு செய்திருப்பதாகவும், இனி அனன்யா பாண்டே படங்களில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாகவும் கூறப்படுகிறது.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top