
விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பிகில். விஜய் இரு வேடங்களில் நடித்த அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் விஜயின் மைக்கேல் ராயப்பன் வேடம் பலரையும் கவர்ந்தது.

இந்த நிலையில் சுசிலீக்ஸ் புகழ் சுசித்ரா பிகில் படம் குறித்த தனது கருத்தை சமீபத்தில் பதிவு செய்துள்ளார். அதில் ராயப்பனுக்காக மட்டும் தான் நான் பிகில் படம் பார்த்தேன், அதனால் இடைவேளைக்கு பிறகு நான் திரையரங்கை விட்டு வெளியே வந்து விட்டேன் என்று கூறியுள்ளார்.