நஸ்ரியா புருஷனை கிழித்தெறிய காத்திருக்கும் விமர்சகர்கள்.! இதுதான் நடக்கபோகுதா.?!

Published on: April 8, 2022
---Advertisement---

மலையாள திரையுலகில் தனது  தனித்துவமான நடிப்பின் மூலம் மொழிகள் கடந்து இந்தியா முழுவதும், பேசப்படும் நடிகராக மாறியுள்ளார் நடிகர் ஃபகத் பாசில். இந்த நடிகரை தமிழ் மக்களுக்கு முதலில் அறிமுகப்படுத்தியது நஸ்ரியா தான்.

அறிமுகமான ஒரு சில படங்களிலேயே அதிக ரசிகர்களை பெற்று, விரைவில் திருமணம் செய்துகொண்டார் நஸ்ரியா. அப்போது இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டவர் பகத் பாசில். அதன் பிறகு தனது நடிப்பால், பல்வேறு ரசிகர்களை தமிழகத்திலும் பெற்றுவிட்டார் இவர்.

இவர் மலையாளத்தில் நடித்து, மிகவும் பிரபலமான திரைப்படமான டிரான்ஸ் திரைப்படம் தமிழில் விரைவில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆக உள்ளதாம். அந்த திரைப்படத்தில் இவர்க்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம் அந்தளவு தனது நடிப்பு திறனால், மிரட்டியிருப்பார் பகத்.

அந்த திரைப்படம் தமிழில் வந்தால் மிகுந்த பிரச்சனை ஆகிவிடும் என கூறும் அளவுக்கு அந்த படம் பேசப்பட்டது. என்றென்றால் அந்த பாடம் கிருஸ்தவ மத போதகர்கள் சிலர் மத போதகம்எனும் பெயரில் எப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள் என அப்படியே சமரசமில்லாமல் பேசியிருந்தது இந்த திரைப்படம்.

இதையும் படியுங்களேன் – அந்த நடிகருக்காக ஃபைட் மாஸ்டரை வெளுத்து வாங்கிய அஜித்.! அப்டி என்ன சொல்லிட்டார்.?!

அந்த திரைப்படம் தமிழில் வெளியானால், உண்மையில் சில பிரச்சனைகள் எழக்கூடும். அந்தளவுக்கு சர்ச்சையான காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்று இருக்கும். தற்போது இந்த திரைப்படம் தமிழில் வெளியாக உள்ளது என கூறியவுடன் சிலர் வரட்டும் அதில் எந்த மாற்றங்கள் செய்கிறார்கள் என பார்க்கலாம் என காத்திருக்கின்றனர்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment