ரஜினி வெறும் அம்புதான், இயக்குவது யார்? பிரேமலதா கேள்வி!

Published on: January 25, 2020
---Advertisement---

ad1249a8def735992b0bc287315b43d4

சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து ரஜினி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவருக்கு கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த ஒரு விஷயத்தில் மற்றும் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து ரஜினியை விமர்சனம் செய்து வருவது தமிழக மக்களுக்கு ஆச்சரியம் அடைய தக்கதாக உள்ளது. இருப்பினும் ஒரு சில அமைச்சர்கள் ரஜினிக்கு ஆதரவாக பேசி வருவதால் அதிமுகவினரிடையே ரஜினியை எதிர்ப்பதா ஆதரிப்பதா என்ற குழப்பம் தற்போது ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் பெரியாரை அவமரியாதையை பேசிய ரஜினி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரியார் ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் என்று கருதப்பட்டது. ஆனால் தொடர்ந்து ரஜினி-பெரியார் பிரச்சனையை அரசியல்வாதிகள் பேசிக்கொண்டே தான் வருகின்றனர்

இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக ரஜினி-பெரியார் பிரச்சனை உச்சத்தில் இருந்த போது அமைதியாக இருந்துவிட்டு தற்போது திடீரென தேமுதிக பொருளாளர் பிரேமலதா அவர்கள் இது குறித்து கருத்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது: ரஜினி வெறும் அம்புதான் என்றும் ரஜினிகாந்தை யாரோ இயக்குகிறார்கள் என்றும் பெரியார் யார் என்பது தமிழகத்தில் மட்டுமல்ல இந்த உலகிற்கே தெரியும் என்று கூறியுள்ளார். மேலும் துக்ளக் விழாவில் துக்ளக் குறித்து மட்டும் ரஜினி பேசியிருந்திருக்கலாம் என்று பிரேமலதா கூறியுள்ளார். பத்து நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு திடீரென இன்று பிரேமலதா விஜயகாந்த் ரஜினியை விமர்சனம் செய்ய என்ன காரணம்? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave a Comment