Cinema History
எம்.ஜி.ஆர் பெரிய வள்ளல் தான்.! ஷூட்டிங்கில் இதெல்லாம் நடக்குமா.? ஆச்சர்யமூட்டும் தகவல்கள்..,
எம்,ஜி.ஆர் பெரிய வள்ளல் என்று நாம் தனியாக சொல்லி தெரியவேண்டியதில்லை. அவரது வீட்டிற்கு எப்போது யார் சென்று பார்த்தாலும், வயிறும் மனதும் நிறைந்து தான் வெளியே செல்வார்கள். அந்தளவுக்கு அவரது பெரும் புகழும் இன்னும் பல வருடம் கடந்தும் இருக்கும் என்பதே உண்மை.
இது பற்றி, பழம்பெரும் நடிகை, நடனகலைஞர் விமலா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பற்றி கூறினார். அவர் கூறுகையில், எம்.ஜி.ஆர் எப்போதும் சின்னவர் என்று தான் அனைவரும் அழைப்போம். சின்னவர் வந்துட்டார் என்றால் அனைவரும் அமைதியாக மாறிவிடுவோம்.
ராமன் தேடிய சீதை திரைப்படம், வட இந்தியாவில் நடைபெற்று வந்தது. அப்போது ஒருவர் ஸ்வெட்டர் இல்லாமல், இருந்துள்ளார் முகமெல்லாம் வீங்கிவிட்டது. இதனை பார்த்து கவனித்த எம்.ஜி.ஆர் நாளை அனைவரும் ஸ்வெட்டர் போட்டுவிட வேண்டும் என கூறிவிட்டு, அடுத்த நாள் அனைவருக்கும் அவரே ஸ்வெட்டர் வாங்கி கொடுத்துவிட்டார்.
அடுத்து மாட்டுக்கார வேலன் திரைப்பட ஷூட்டிங் வைகை டேம் பக்கம் நடந்தது. கூட்டம் அலைமோதியது. அப்போது, ஒரு பாட்டி கிழிந்த சேலையுடன் எம்.ஜி.ஆரை பார்க்க வந்துள்ளார். உடனே நிர்வாகத்திடம் கூறி புதிய சேலைகளை அவருக்கு வழங்கினார். மேலும், அன்று ஷூட்டிங் வந்த அனைவருக்கும் டீ கொடுக்க கூறினார். எப்படியும் 10 ஆயிரம் பேர் இருந்திருப்பர்.
இதையும் படியுங்களேன் – இப்படி ஒரு கேவலமான படத்தை எடுத்துருக்கவே கூடாது.! விஜய் பட இயக்குனர் குமுறல்.!
அன்னமிட்ட கை பட ஷூட்டிங் தேக்கடியில் நடந்தது. அங்கு ஓர் ஆலமரத்து அடியில் குழந்தைகளை தூங்க வைத்துவிட்டு வேலையாட்கள் தேயிலை எஸ்டேட்டில் வேலைபார்த்து வந்தனர். இதனை கவனித்த எம்.ஜி.ஆர். ஒரே நாளில் பெரிய பந்தல் போட்டு, அதற்கடியில் குழந்தைகளை தூங்க வைக்க ஏற்பாடு செய்துவிட்டார். அவர் இயக்கிய மதுரையை மீட் சுந்தரபாண்டியன் திரைப்பட ஷூட்டிங் ராஜஸ்தானில் நடைபெற்ற போது அனைவருடனும் ஒன்றாக இணைந்து அவரும் சாப்பிடும் குணம் குணம் கொண்டவர்.