நயன்தாரா  யாருக்கு சொந்தம்.? மோதிக்கொள்ளும் 2 இயக்குனர்கள்

Published on: January 25, 2020
---Advertisement---

3be4d4e3786f380d9ace7b0e79b9ff6c

ஹரி இயக்கத்தில் உருவான ஐயா படம் மூலம் அவர் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தமிழுக்கு வரும் முன் சில மலையாள திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

இந்நிலையில், அவருக்கு நயன்தாரா என பெயர் வைத்தது நான்தான் என 2 மலையாள இயக்குனர்களிடையே மோதல் எழுந்துள்ளது. ஜான் டிட்டோ என்பவர் கூறிய போது ‘2003ம் ஆண்டு நான் உதவி இயக்குனராக இருந்த போது அங்கு ஸ்டில் போட்டோகிராபர் சுவாமி நாதன் என்பவர் வந்தார். இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கும் புதிய படத்தில் நடிக்கும் ஹீரோயினுக்கு நல்ல பெயரை தேடிக்கொண்டிருக்கிறோம்.

நீயே ஒரு பெயர் சொல்லேன் எனக்கேட்டார். அப்போது நான் நயன்தாரா எனக்கூறினேன். அதை அவர் குறித்தி வைத்துக்கொண்டார். அதன்பின் நயன்தாரா பெரிய நடிகை ஆகிவிட்டார். ஆனால், நான் வாய்ப்பில்லாமல் வீட்டில் இருக்கிறேன். அவரை சந்தித்தால் இதுபற்றி கூறுவேன் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் சத்யன் அந்திக்காடு’ டிட்டோ என்பவர் யாரென்று எனக்கு தெரியாது. படப்பிடிப்பில் சில பெயர்களை எழுதி வைத்திருந்தோம். நயன்தாரா என்பதை நயன்தாராவே தேர்வு செய்தார். இது அங்கிருந்த எல்லோருக்கும் தெரியும். தற்போது எதற்கு இந்த பிரச்சனை என தெரியவில்லை. வீண் விவாதங்கள் தேவையில்லை. இதுதான் உண்மை’ எனக் கூறியுள்ளார்.

Leave a Comment