ஆர் கே சுரேஷுக்கு அடித்தது ஜாக்பாட் ! பாலா படத்தில் ஹீரோ அவதாரம் !

Published on: January 25, 2020
---Advertisement---

0034dd9f30aab3af667b059449ff158b-2

நடிகர் ஆர் கே சுரேஷ் பாலா தயாரிக்கும் புதிய பெயரிடப்படாத படத்தில் நடிக்க இருக்கிறார்.

நடிகர் ஆர் கே சுரேஷ் தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக அறிமுகமாகி நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றார். அதன் பின் பில்லா பாண்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும் எதுவும் சொல்லிக்கொள்ளும் படியான வெற்றியை அவருக்குப் பெற்றுத் தரவில்லை. இதையடுத்து இந்த ஆண்டு வெளியான நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் மீண்டும் வில்லனாக நடித்தார்.

இந்நிலையில் அவர் இப்போது அவரது குரு பாலா தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இந்த படம் மலையாளத்தில் வெளியான ஜோசப் எனும் படத்தின் ரீமேக் ஆகும். இதை பத்மகுமார் இயக்க, பி ஸ்டூடியோஸ் சார்பில் பாலா தயாரிக்க இருக்கிறார். பாலா தயாரிக்கும் படங்கள் தரமான படங்களாக இருக்கும் என்பது உறுதி என்பதால் ஆர் கே சுரேஷுக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக அமையும் என சொல்லப்படுகிறது.

Leave a Comment