Connect with us

Cinema History

எம்.ஜி.ஆரே செய்கிறார் உங்களுக்கு என்ன.?! ரஜினியை அலறவிட்ட உதவியாளர்.!

தமிழ் சினிமா தற்போது தான் ஹீரோக்கள் வசம் சிக்கி, அவர்கள் சொல்படி , கதைக்களம் அமைக்கப்பட்டு, அதன் ரிசல்ட்டை தான் தமிழ் சினிமா ரசிகர்கள் பார்க்கும் வண்ணம் மாறிவிட்டது என்றே கூறலாம். அதற்கு உதாரணமாக சமீபத்தில் வந்த இரு பெரிய ஹீரோ படங்கள் கூட ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே கூறலாம்.

ஆனால், அந்த காலத்தில் 80, 90 களில் கதாசிரியர், இயக்குனர்கள் கையில் தான் சினிமா. அப்போது நல்ல நல்ல கதைக்களங்கள், சமரசமில்லா திரைக்கதை என தமிழ் சினிமா கோலோச்சி இருந்தது. எம்.ஜி.ஆர் சிவாஜி, ரஜினி கமல் வரையில் கதைக்கு என்ன தேவையோ அது தான் என இருந்தது. அதன் பிறகு தான் மாறிப்போனது.

அப்போது எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த எங்கேயோ கேட்ட குரல் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்கு முத்துராமனின் ஆஸ்தான கேமிராமென் பாபு கேமிரா. அவருக்கு உதவியாக மூத்த டெக்னீசியன் கேசவன் என்பவர் உதவியாளராக இருந்துள்ளாரம்.

எம்,ஜி.ஆர் காலத்தில் இருந்தே இவர் சினிமாவில் இருக்கிறாராம். தற்போது தான் கேமிரா லைட்டிங் பார்க்க வேண்டும் என்றால் உதவி இயக்குனர் யாரையாவது வைத்து பார்த்து விட்டு  அதன் பிறகுதான் ஹீரோவை நிற்க வைப்பார்கள். ஆனால் அந்தக்காலத்தில் ஹீரோக்களை தான் லைட்டிங்கிற்கு நிற்க வைப்பார்களாம்.

இதையும் படியுங்களேன் – கண்ணம்மாவை விட்டு தெரிந்து ஓடும் வெண்பா.! வெளியான அதிர்ச்சி தகவல்.!

எங்கேயோ கேட்ட குரல் படத்திற்கு கேசவன் லைட்டிங் செய்யும் போது ரஜினியை வந்து நிற்க சொன்னார்களாம். ஆனால், அவர் நானா, வேறு யாரையாவது நிற்க சொல்லுங்கள் என ரஜினி கூறவே, கேசவன், எம்.ஜி.ஆரே லைட்டிங்கிற்கு நிற்பார் . நீங்களும் நிற்க வேண்டும் என கூறி ரஜினியையே அதிர வைத்துள்ளார் கேமிரா உதவியாளர் கேசவன். இந்த தகவலை, சினிமா பத்திரிகையாளர் இதயக்கனி விஜயன் ஒரு வீடியோவில் தெரிவித்தார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top