வெறும் 20 நாளுக்கு 10 கோடி சம்பளமா? தயாரிப்பாளர்களை கதறவிடும் நடிகை.!

Published on: April 14, 2022
nayanthara
---Advertisement---

மாஸ் ஹீரோக்கள் தான் தங்களின் மார்க்கெட்டுக்கு ஏற்றவாறு சம்பளத்தை அவ்வபோது உயர்த்தி வருகிறார்கள் என்றால். தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக டாப் நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாராவும் அவ்வபோது அவரின் சம்பளத்தை கணிசமாக உயர்த்தி வருகிறார்.

மற்ற நடிகைகளைபோலவே திரையுலகில் அறிமுகமான நயன்தாரா இடையில் சில சொந்த பிரச்சனை காரணமாக சினிமாவை விட்டே சென்று விட்டார். பின்னர் ராஜா ராணி படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்த நயன்தாரா யாரும் எதிர்பாராத அளவிற்கு உச்சம் தொட ஆரம்பித்தார். திடீரென அவரின் மார்க்கெட் உயர்ந்தது.

nayanthara

டாப்பில் இருந்த அனைத்து நடிகைகளையும் ஓரங்கட்டிய நயன்தாரா உச்சம் சென்றதோடு தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்றார். வயதானால் மார்க்கெட் போய்விடும் என்பதை தகர்த்து வயது ஏற ஏற இவரின் மார்க்கெட்டையும் ஏற்றிக்கொண்டே சென்றார்.

நயன்தாரா தற்போது கைவசம் அஸ்வின் சரவணன் இயக்கும் கனெக்ட், மலையாளத்தில் அஸ்வின் புத்திரன் இயக்கும் கோல்ட், தெலுங்கில் மோகன் ராஜா இயக்கும் காட்பாதர் போன்ற பல படங்களை வைத்துள்ளார். இதுதவிர இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விக்னேஷ் என்பவர் இயக்கும் O2 என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

nayanthara- samantha

இந்நிலையில் தான் நயன்தாரா அவரின் சம்பளத்தை உயர்த்தி தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதன்படி அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க இருக்கும் படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாரா 10 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளாராம். இதில் கொடுமை என்னவென்றால் இந்த படத்திற்காக நயன்தாரா வெறும் 20 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment