என் முகம் பளபளப்பாக இருப்பதன் காரணம் என்ன ? மோடி சொன்ன ரகசியம் !

Published on: January 25, 2020
---Advertisement---

fe4f86ff63569b0ffe9165e232c47570

பல்வேறு துறையில் சாதித்த மாணவர்களை சந்தித்த மோடி அவர்களோடு கலந்துரையாடினார்.

இளம் வயதிலேயே பல்வேறு துறைகளில் சாதனை செய்து பிரதான்மந்திரி பால் புரஸ்கார்' விருது பெற்ற மாணவர்களை தனது இல்லத்தில் சந்தித்தார் பிரதமர் மோடி. அப்போது மாணவர்களிடம் பேசிய மோடி, குழந்தைகளின் உழைப்பு தனக்கு ஆச்சர்யத்தையும் ஊக்கத்தையும் அளிப்பதாக சொன்னார்.

இந்த சந்திப்பில் மோடி தன்னுடைய முகம் பிரகாசமாக இருப்பது குறித்து மாணவர்களிடம் பேசிய போது ‘நான் கடுமையாக உழைப்பேன், அப்போது எனது முகம் வியர்க்கும். நான் அந்த வியர்வையொடு முகத்தை மசாஜ் செய்வேன். அதனால் எனது முகம் பளிச்சென்று உள்ளது. குழந்தைகளும்  ஒருநாளைக்கு நான்கு முறை வியர்க்கும் அளவுக்கான வேலைகளை செய்ய வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

Leave a Comment