Cinema News
பாலிவுட்டை நடுங்க வைத்த பாக்ஸ் ஆபிஸ் சுனாமிகள்.! சீக்கிரம் முழிச்சிக்கோங்க..,
சமீபகாலமாக தென்னிந்திய சினிமாக்கள், இந்திய சினிமாவை மாற்றி அமைத்து வருகிறது. பாலிவுட் சினிமா என்றால் ஹாலிவுட் சினிமா எனும் அளவுக்கு ஒரு பிம்பம் இருந்தது . தென்னக சினிமாக்கள் அந்தந்த மாநிலங்கள் மட்டுமே திரையிடப்பட்டு வெற்றி பெறும்.
இதனை தமிழ் சினிமாவில் இருந்து ஷங்கர் , மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் மட்டுமே கொஞ்சம் மாற்றி அமைத்து இருந்தனர். இருந்தாலும் அவர்களால் அதிக நாட்கள் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
அதன்பின்னர், ராஜமவுலி எனும் இயக்குனர் வந்து பாகுபலி எனும் பிரம்மாண்டத்தை கொடுத்து இந்திய சினிமாவையே ஒரு கணம் திகைக்க வைத்து விட்டார். அதன் பின்னர் தெலுங்கு சினிமாவில் இருந்து அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா திரைப்படம் வெளியாகி பாலிவுட்டில் 100 கோடி வசூலை எளிதாக பெற்று விட்டது. அதற்கடுத்ததாக வெளியான திரைப்படம் RRR ஆயிரம் கோடி வசூலை அசால்டாக பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் வெளியான, கே ஜி எஃப் 2 திரைப்படமும் பாலிவுட்டில் பாக்ஸ் ஆபீஸ் சுனாமி என்று வர்ணிக்கப்படும் அளவிற்கு மிகப்பெரிய வசூலை ஈட்டி வருகிறது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து கொண்டே வருகிறது. வரும் வாரங்களில் இன்னும் அதிகமாக வசூல் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்களேன் – எங்க வண்டிய திருடிட்டாங்க., பார்த்த சொல்லுங்க.! விரக்தியில் மணிமேகலை.! ஆறுதல் கூறும் CWC நண்பர்கள்.!
ஆனால் , இந்த சமயத்தில் பெரிய பெரிய பாலிவுட் நடிகர்கள் படங்கள் சரியாக போகவில்லை சல்மான்கான், ஷாருக்கான், அமீர்கான், அக்ஷய் குமார் ஆகியோர் படங்கள் எதுவும் சமீபத்தில் சரியாக பெரிய வெற்றியை பெறவில்லை.
இதனை கவனித்து , பாலிவுட் திரையுலகம் அடுத்ததாக நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து அடுத்து பெரிய ஹிட் கொடுத்து மீண்டும், பழைய நிலைமைக்கு வருமா? என்பதை அடுத்தடுத்த பாலிவுட் திரைப்படங்கள் வெளியாகும் போது தான் தெரியும்.