பெண்களுக்காக போதைப்பழக்கம்… 10 ஆண்டுகள் போதைக்கு அடிமையான நடிகர்….!

Published on: April 18, 2022
sanjay dutt
---Advertisement---

இந்த உலகில் குடிப்பழக்கம் மற்றும் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகும் ஒவ்வொரு நபரும் காதல் தோல்வி, வேலையின்மை என ஏதேனும் ஒரு காரணம் கூறுவார்கள். ஆனால் பிரபல நடிகர் ஒருவர் பெண்களிடம் பேசுவதற்காக போதைப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த நடிகர் வேறு யாருமல்ல பாலிவுட்டில் பிரபல நடிகரான சஞ்சய் தத் தான். அக்னிபாத் என்ற படத்தில் கஞ்சா கடத்தல் கும்பல் தலைவனாக நடித்த சஞ்சய் தத், ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கேஜிஎப் இரண்டாம் பாகத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

sanjay dutt
sanjay dutt

இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, “நான் முதலில் கூச்ச சுபாவம் கொண்டவனாக இருந்தேன். அப்போது, பெண்களிடம் பேச வேண்டுமென ஆசை இருந்தாலும், எனக்குள் இருந்த பயம் அதை தடுத்தது. அதனால் எனக்கு நெருங்கிய சிலர் போதைப்பொருள் உபயோகம் செய்தால் யாரிடமும் இயல்பாக பேச முடியும் என கூறினார்கள்.

நானும் கிட்டத்தட்ட 10 வருடங்கள் அதை உபயோகம் செய்தேன். அது இல்லாமல் நான் இல்லை என்னும் அளவிற்கு குளியலறையில் கூட அதை உபயோகம் செய்துள்ளேன். பின்னர் மிகவும் தாமதமாகத்தான் அதன் விளைவுகள் தெரிந்தது. இப்போது அதை விட்டுவிட்டேன். அந்த 10 வருடங்கள் எனது படிப்பில் கூட கவனம் செலுத்தவில்லை” என கூறியுள்ளார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment