வலிமை’ படத்தின் நாயகி இவரா? திடீர் திருப்பம்!

Published on: January 26, 2020
---Advertisement---

1e79b2de8ed7a42135c1343e2b89fbc5

அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்தின் ராமோஜிராவ் பிலிம் சிட்டி படப்பிடிப்பு மற்றும் சென்னை படப்பிடிப்பு என இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. ஆனால் இன்னும் இந்த படத்தின் நாயகி யார்? என்பது குறித்த தகவல் வெளியே வரவில்லை

இந்த நிலையில் இந்த படத்தில் அஜீத் ஜோடியாக யாமி கவுதம், இலியானா ஆகிய இருவரில் ஒருவர் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இருவருமே இல்லை என்றும் மூன்றாவதாக ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இவர்தான் இந்த நாயகியாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்தான் நிக்கி கல்யாணி. 

நிக்கி கல்யாணிக்கு இவ்வளவு விரைவில் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என கோலிவுட் திரையுலகில் இதுவரை எதிர்பார்க்காத நிலையில் அவருக்கே இந்த செய்தி அதிர்ச்சியாக இருந்ததாகவும், கால்ஷீட் தேதிகள் மற்றும் சம்பளம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 

அதேபோல் வலிமை படத்தின் முக்கிய வில்லன் குறித்த தகவலும் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி பாலிவுட்டின் பிரபல ஹீரோ ஒருவர் இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அஜித் நடித்த விவேகம் படத்தில் பாலிவுட் ஹீரோ விவேக் ஓபராய் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment