
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவ ரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 60% முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் அடுத்த மாதத்திற்குள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளிவந்து விஜய் ரசிகர்களை குஷிப்படுத்திய நிலையில் நாளை மாலை 5 மணிக்கு மூன்றாவது லுக் வெளிவர உள்ளது
இந்த மூன்றாவது லுக்கில் விஜய் ரசிகர்களை மட்டுமின்றி விஜய் சேதுபதி ரசிகர்களையும் குஷிப்படுத்தும் வகையில் உள்ளது. அதாவது இந்த லுக்கில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் தோற்றமளிக்கும் போஸ்டராக இருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து மாஸ்டர் படத்தின் ஹேஷ்டேக் மீண்டும் டுவிட்டரில் டிரெண்ட் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது
Thalapathy + Makkal Selvan –>
Third look releasing tomorrow 5pm.#Master #MasterThirdLook@actorvijay @VijaySethuOffl @Dir_Lokesh @anirudhofficial @jagadishbliss @Lalit_sevenscr @imKBRshanthnu @MalavikaM_ @andrea_jeremiah @gopiprasannaa pic.twitter.com/XlYZlUDNdj
— XB Film Creators (@XBFilmCreators) January 25, 2020