புது மாப்பிளையை பாடாய் படுத்திய ராக்கி பாய்.! நாங்க எந்த எல்லைக்கும் போவோம்.!

Published on: April 21, 2022
---Advertisement---

தற்போது இந்தியாவில் உள்ள பெரும்பாலான திரையரங்கு எங்கும் ராக்கி பாய் கண்ட்ரோல் தான். கே.ஜி.எப் 2 படத்தின் தாக்கம் பல்வேறு திரையரங்குகளை புலம்ப வைத்துளளன. பல்வேறு திரையரங்குகளை வாழ்த்த வைத்துள்ளன.

இதன் மூலம் கன்னட திரையுலகம் உலகம் முழுக்க வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளன. இதற்கு  முன்னர், கன்னடகாரர்களே கன்னட சினிமாக்களை பார்க்க மாட்டார்களாம். அண்மையில் கே.ஜி.எப் 2விற்கு முன்னர் வெளியான RRR படத்திற்கு கூட கர்நாடகாவில் கன்னடத்தை விட தெலுங்கு வெர்சன் தான் அதிகமாக ஒளிபரப்பப்பட்டன. அது கூட சர்ச்சையானது.

ஆனால் அது அத்தனையும், கே.ஜி.எப் 2 மாற்றியமைத்துள்ளது என்றே கூறலாம். இது எந்தளவுக்கு என்றால், ஒரு புதுமண தம்பதி, தங்கள் திருமண பத்திரிக்கையை ராக்கி பாய் பேசும் ஒரு பிரபல வசனத்தை மாற்றியமைத்து தங்களது பத்திரிகைகளில் அச்சடித்துள்ளார்.

இதையும் படியுங்களேன் – ஆண்டவர் ரசிகர்களை கலக்கத்தில் வைத்திருக்கும் லோகேஷ்.! காரணம் இதுதானா.?!

அதாவது, கர்நாடகாவை சேர்ந்த சந்திரசேகர் – ஸ்வேதா ஜோடி, தங்களது திருமண பத்திரிகையில்,   ‘திருமணம், திருமணம் திருமணம், நான் அதை வெறுக்கிறேன். ஆனால் எனது குடும்பத்தார் அதனை வரவேற்கிறேன். அதனால் என்னால் அதனை மறுக்க முடியாது ‘ என ஆங்கிலத்தில் Marriage marriage marriage , I avoid , Family and relatives like marriage, So, I cant Avoid  என  வித்தியாசமாக அச்சடித்துள்ளார். இந்த பத்திரிகை தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment