வீட்டிற்கு வரலாமா.? வைரமுத்து போனை சட்டெனெ துண்டித்த A.R.ரகுமான்.! அடுத்து நடந்தது வேற லெவல்..,

Published on: April 21, 2022
---Advertisement---

திரை துறையில் மிகவும் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதும் அதற்கு இணையாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதும் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான “ஸ்லம்டாக் மில்லியனர்” திரைப்படத்திற்காக இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் பெற்றார். சினிமா திரை உலகம் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் அவரை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

இந்த விருது தொடர்பாக அவரை கெளரவ படுத்தும் விதமாக தமிழ் திரையுலகம் ஓர் பாராட்டு விழா நடத்தவும் செய்தது. அப்போது  கவிப்பேரரசு வைரமுத்து, ஏ.ஆர்.ரகுமானை அலைபேசியில் அழைத்து உங்கள் வீட்டிற்கு வரலாமா? என்று கேட்ட பொழுது ஏ.ஆர். ரகுமான் சரியான பதில் கூறாமல் அழைப்பை துண்டித்து விட்டாராம். இதனை எதிர்பாக்காத வைரமுத்து அமைதியாக இருந்தாராம்.

இதனை தொடர்ந்து தனது வீட்டிற்கு திரும்பிய வைரமுத்துவுக்கு சில மணி நேரங்களிலேயே வீட்டின் காலின் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு சென்று பார்க்கும் போது, ஏ.ஆர். ரகுமான் வாசலில் நின்று கொண்டிருந்தாராம். அதிர்ச்சி அடைந்து பார்த்த வைரமுத்துவிடம் நீங்கள் எனக்கு வயதில் மூத்தவர் நீங்கள் என்னை தேடி வீட்டுக்கு வருவது சரி இல்லை அதான் நானே வந்தேன் என்று கூறினாராம் ஏ.ஆர். ரகுமான்.

இதையும் படியுங்களேன் – முன்னணி நடிகர்களே செய்யாததை விஷயத்தை செய்த நபர் வடிவேலு தான்.! அடித்து கூறும் பிரபலம்.!

ஆஸ்கர் , கோல்டன் குளோப் விருது போன்ற விருதுகளை பெற்ற நிலையிலும் தான் எந்த இடத்திற்கு போனாலும் இப்படிதான் இருப்பேன் என என்னும் விதமாக அமைந்தது இந்த நிகழ்வு. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் அடுத்ததாக பொன்னியின் செல்வன், கோப்ரா, மாமன்னன் ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகிறது. விரைவில் அடுத்ததடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment