நயன்தாரா காதலரின் குசும்பை பாத்தீங்களா.?! எப்படியெல்லாம் விளம்பரம் தேடுறாங்க..,

Published on: April 23, 2022
---Advertisement---

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதிக்கொண்டன. இதில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 222 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் இதனை 20 ஓவர்களில் எடுக்க முடியாமல் டெல்லி அணி, ராஜஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியது.

இதில் ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 222 ரன்கள் அடித்ததற்கு விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அதையே தனது திரைப்பட ட்ரைலருக்கு ஒரு விளம்பர யுக்தியாகவும் கையாண்டுள்ளார்.

ஆம் விக்னேஷ் சிவன் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இத்திரைப்படம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி நயன்தாரா சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது.

இதில் அனிருத் இசையமைத்திருந்த டுடுடு  (TWO TWO TWO ) பாடல் மிகவும் பிரபலம். இதனை சம்பந்தப்படுத்தி 222 ரன்கள் 20 ஓவர் என்பதை குறிப்பிட்டு, தனது படத்திற்கு விளம்பரம் தேடுகிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

இதையும் படியுங்களேன் – ஹீரோயினை தனியறையில் சந்தித்த விமல்.! தெறித்து ஓடிய ‘அந்த’ நடிகை.! அப்படி என்னதான் நடந்தது.?!

ஒரு படத்திற்கு கதை யோசிப்பதை விட தற்போது அதனை எப்படியெல்லாம் விளம்பரப்படுத்தி விடலாம் என்பதை பற்றியே படக்குழுவினர் அதிகமாக சிந்தித்து வருகின்றனர். அதன் விளைவே நாம் தற்போது அதிகமாகவே கண்டு வருகிறோம். அதேபோல கதைகளிலும் சிந்தித்து செயல்பட்டால் நமக்கும் பல்வேறு விதமான நல்ல திரைப்படங்கள் கிடைக்கும்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment