
Cinema News
ஸ்ரீதேவியை திருமணம் செய்ய வாய்ப்பு தேடி வந்தும் மறுத்த நடிகர்… அட இது தெரியாம போச்சே!….
Published on
By
தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.
அதன்பின் ரஜினி, கமல் ஆகியோரோடு பல படங்களில் இவர் ஜோடியாக நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமா பக்கம் சென்று அங்கு சிரஞ்சீவி, வெங்கடேஷ் போன்ற அப்போதைய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.
மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் போதே பாலிவுட் பக்கம் சென்று ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கி அங்கும் முன்னணி நடிகையாக மாறினார். அதன்பின் அவர் தமிழ் சினிமா பக்கம் வரவில்லை. பாலிவுட்டிலேயெ செட்டில் ஆனார்.
மேலும், தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டார். போனிகபூருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தும் அவருக்கு 2வது மனைவிகாக வாழ்க்கை நடத்தி 2 பெண் குழந்தைகளையும் பெற்றார். இந்த போனிகபூர்தான் அஜித்தை வைத்து வலிமை படத்தை தயாரித்தவர், தற்போது அஜித்தின் புதிய படத்திற்கும் அவர்தான் தயாரிப்பாளர்.
இந்நிலையில், தெலுங்கு நடிகரும், இதுதான்டா போலீஸ் உள்ளிட்ட பல அதிரடி படங்களில் நடித்தவருமான டாக்டர் ராஜசேகரை ஸ்ரீதேவிக்கு மாப்பிள்ளை கேட்டது வெளியே தெரியவந்துள்ளது. அதாவது, அப்போது ஸ்ரீதேவி நடிகையாக இருந்தார்.
ஆனால், ராஜசேகர் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். எனவே, ஸ்ரீதேவியின் தந்தை, ராஜசேகரின் தந்தையிடம் உங்கள் மகனை என் மகள் ஸ்ரீதேவிக்கு திருமணம் செய்து வைக்க முடியுமா என கேட்டுள்ளார். ஆனால், ஸ்ரீதேவி நடிகை என்பதால் ராஜசேகரின் தந்தை அதற்கு மறுத்துவிட்டார். இதை ஒரு பேட்டியில் ராஜசேகரே உறுதி செய்துள்ளார்.
ஆனால், ராஜசேகரே அதன்பின் நடிகராகி நடிகை ஜீவிதாவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Vijay TVK: மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் எட்டு பேர் கொண்ட குழு இன்று கரூருக்கு சென்று ஆய்வு செய்ய...
Devara 2: பேன் இந்தியா திரைப்படமாக வெளிவந்த தேவரா படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வரும் நிலையில் புது எண்ட்ரி ஆக...
Kaithi 2: மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி ஆகிய திரைப்படங்களை இயக்கி கோலிவுட்டில் முன்னணி இயக்குனர்களில் முக்கியமானவராக மாறியிருப்பவர்...
வடிவேலு ஒரு முட்டாள் : சமீபத்தில் வடிவேலு ஒரு 10 youtube-பர்கள் சேர்ந்து சினிமாவை அழித்துக் கொண்டு வருகிறார்கள். அவர்களை தூங்க...
நான் கைக்கூலி அல்ல தினக்கூலி : kpyபாலா இன்டர்நேஷனல் கைக்கூலி அவர் தமிழ்நாட்டுக்கு பேராபத்து என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி பாலா...