பராசக்தி படம் பார்க்க தியேட்டருக்கு போன சிவாஜி!. சிறுவன் காட்டிய அன்பில் நெகிழ்ந்துபோன நடிகர் திலகம்..
Parasakthi: சிறு வயது முதலே நாடகங்களில் நடித்து பராசக்தி திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி. இந்த படம் உருவானதற்கு பின்னால் பல கதைகள் இருக்கிறது. பல தடைகளை சந்தித்து வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் இது. படம் உருவாகும் போதே ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு சிவாஜியை பிடிக்கவில்லை.
கே.ஆர்.ராமசாமியை வைத்து எடுப்போம் என சொல்ல சிவாஜியின் குரு பெருமாள் முதலியார் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. பராசக்தி படத்தை ஏவிஎம் நிறுவனத்துடன் இணைந்து அவர் தயாரித்தார். சிவாஜிதான் நடிக்க வேண்டும் என்பதில் அவர் மட்டுமே உறுதியாக இருந்தார். இந்த படத்தில் நாம் கடைசி வரை இருப்போமோ என்கிற சந்தேகத்துடனே சிவாஜி நடித்தார்.
இதையும் படிங்க: சிவாஜி படத்தில் நடிக்க வந்த வாய்ப்பு!. முடியாம போச்சி!.. இப்ப வரைக்கும் ஃபீல் பண்ணும் நடிகை…
படத்திற்கு கதை,வசனம் கலைஞர் கருணாநிதி என்பதால் கண்டிப்பாக சர்ச்சையான விஷயங்கள் படத்தில் இருக்கும் என தணிக்கை அதிகாரிகள் நினைத்தனர். அதோடு, சிவாஜி புதுமுகம் என்பதால் முதலில் இப்படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு இல்லை. ஆனால், படத்தின் இடம் பெற்ற வசனங்களும், சிவாஜி அதை பேசியிருந்த விதமும் ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருந்தது.
படத்தின் இறுதிக்காட்சியில் இடம்பெற்ற வசனங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் சிவாஜி. படத்தில் கடவுள் நம்பிக்கைக்கு எதிராக பல காட்சிகள் இருந்ததால் சில பத்திரிக்கைகள் படத்தை கடுமையாக விமர்சனம் செய்தது. எனவே, பராசக்தி படத்திற்கு எப்போதும் வேண்டுமானாலும் தடை வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க: சிக்கலில் தவித்த சிவாஜி படத்திற்கு தானாக முன்வந்து உதவிய பிரபலம்!.. அதுக்கான காரணம் தெரியுமா?..
இதுவே படத்திற்கு பெரிய விளம்பரமாக அமைந்தது. படத்தை தியேட்டரில் இருந்து எடுப்பதற்குள் பார்த்துவிட வேண்டும் என ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக போய் இப்படத்தை பார்த்தார்கள். இதனால் தமிழகத்தில் வெளியான எல்லா திரையரங்கிலும் இப்படம் 50 நாட்களை கடந்து ஓடியது.
பராசக்தி வெளியானபோது ரசிகர்கள் இப்படத்தை எப்படி ரசிக்கிறார்கள் என தெரிந்துகொள்வதற்காக சிவாஜி மற்றும் அப்படத்தின் இயக்குனர் கிருஷ்ணன் - பஞ்சு ஆகியோர் ஒரு தியேட்டருக்கு போனார்கள். சிவாஜிக்கு முன் வரிசையில் பட்டு சட்டை, வேஷ்டி அணிந்து உட்கார்ந்திருந்த ஒரு சிறுவனுக்கு படத்தில் நடிப்பவர்தான் பின்னால் அமர்ந்திருக்கிறார் என்பது தெரிந்துப்போனது. எனவே, படம் பார்ப்பது, சிவாஜியை திரும்பி பார்ப்பது என இருந்தான்.
படத்தின் இறுதிக்காட்சி முடிந்தபின் சிவாஜியிடம் வந்து அவரின் கையில் முத்தம் கொடுத்தான் அந்த சிறுவன். சிவாஜி நெகிழ்ந்து போனார். அதுதான் சினிமாவில் நடித்ததற்கு அவருக்கு கிடைத்த முதல் பாராட்டு.
இதையும் படிங்க: முதல் சிங்கிள் ஷாட் ஹீரோவாக சிவாஜி மாறியது இப்படித்தான்!.. நடிகர் திலகம்னா சும்மாவா!