பிச்சைக்காரன் 2 படம் இந்த டிவி சீரியலின் காப்பியா? விஜய் ஆண்டனி மீது மீண்டும் எழுந்த புகார்…

Pichaikkaran 2
கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “பிச்சைக்காரன்”. இத்திரைப்படம் விஜய் ஆண்டணி கேரியரில் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு “பிச்சைக்காரன் 2” திரைப்படம் உருவாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

Pichaikkaran 2
இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு “பிச்சைக்காரன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியது. இந்த நிலையில் கடந்த மாதம் “பிச்சைக்காரன் 2” படப்பிடிப்பில் விஜய் ஆண்டனிக்கு விபத்து நேர்ந்ததாக செய்திகள் வெளிவந்தன. இந்த செய்தி சினிமா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் அதன் பின் சில வாரங்கள் சிகிச்சைக்குப் பிறகு விஜய் ஆண்டனி மீண்டு வந்தார்.
“பிச்சைக்காரன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இத்திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வெளிவந்தது. மூளை மாற்று அறுவை சிகிச்சையை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகியுள்ளதாக தெரிய வந்தது.

Valai Pechu Bismi
இதனை தொடர்ந்து நேற்று வலைப்பேச்சு வீடியோவில் அந்தணன், ஒரு பகீர் தகவலை பகிர்ந்திருந்தார். அதாவது “பிச்சைக்காரன் 2” தன்னுடைய கதை என்று சிங்கப்பூரில் இருந்து ஒருவர் தன்னை தொடர்புகொண்டு கூறியதாக ஒரு தகவலை கூறினார். இந்த சர்ச்சை அடங்குவதற்குள் தற்போது இரண்டாவதாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

Vijay Antony
இன்று வலைப்பேச்சு வீடியோவில் பத்திரிக்கையாளர் பிஸ்மி, அந்த தகவலை பகிர்ந்துகொண்டார். அதாவது சிங்கப்பூரில் இருந்து வேறு நபர் அவருக்கு தொடர்புகொண்டாராம். சிங்கப்பூரில் மிகப் பிரபலமான தமிழ் தொலைக்காட்சியான வசந்தம் தொலைக்காட்சியில் ஆத்மான் என்று ஒரு சீரியல் ஒளிபரப்பாகி வருகிறதாம். அந்த சீரியலின் கதையும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் கதையும் ஒரே கதைதான் என கூறினாராம். இவ்வாறு விஜய் ஆண்டனி இயக்கிய “பிச்சைக்காரன் 2” திரைப்படத்தின் மீது தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.
இதையும் படிங்க: தேவயானி அந்த மாதிரி நடிச்சிருக்காங்களா!… வாபஸ் வாங்க மறுத்த பயில்வானுக்கு ரிவீட் அடித்த ஷகீலா… தரமான சம்பவம்…