ரஜினி, கமல், விஜய், அஜீத் என அனைவருடனும் நெருங்கிப் பணியாற்றியவர் பத்திரிகை தொடர்பாளர் நிகில் முருகன். 28 ஆண்டுகால அனுபவம் மிக்கவர். இவர் தனது திரை உலக அனுபவங்கள் குறித்து என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா…
நான் ஜேர்னலிசம் முடிச்சிட்டு பொம்மை பத்திரிகைல ஒர்க் பண்ணினேன். சினிமா எக்ஸ்பிரஸ்ல ஒர்க் பண்ணும்போது பாட்ஷா படத்தோட பிஆர்ஓ கிட்டபோய் நான் ரஜினி சாரோட ரசிகர். எனக்கு இந்தப் படத்துக்கு ப்ரிவியு ஷோ வேணும்னு கேட்டேன். கண்டிப்பா தர்றேன்னாரு. ஜனவரி 12, 1994ல ஆல்பர்ட் தியேட்டர்ல ரிலீஸ். அப்போ ஷோக்கு எல்லாரும் போயிக்கிட்டே இருக்காங்க. டிக்கெட் கொடுக்கல. எடிட்டர் நான் சொல்லிட்டேன். கொடுப்பாருன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. அப்ப பத்திரிகையாளர் எல்லாரும் ஆடியன்ஸோடு தியேட்டருக்குள்ள போறாங்க.

நான் வெயிட் பண்ணிக்கிட்டே இருந்தேன். டிக்கெட் கொடுக்கல. படம் ஓட ஆரம்பிச்சிட்டு. ஆட்டோக்காரன் சாங் ஓடுது. அப்போ போயி நான் டிக்கெட் கேட்டேன். நீ எல்லாம் படம் பர்ஸ்ட் டே படம் பார்க்கலன்னு யாரு அழுதான்னு காவலர்களால தள்ளி விட்டுட்டாங்க. நான் படிக்கட்டுல உருண்டு விழுறேன். அப்போ என் நல்ல நேரம் மழை பெய்தது.
என் கண்ணீர் வெளியே தெரியல. அப்போ நான் எடுத்த சபதம்… எந்தப் படத்துக்காக நாம தூக்கி வீசப்பட்டோமோ… அதே ரஜினி சார் நடிக்கிற படங்களுக்கு பிஆர்ஓ வா வரணும்னு நினைச்சேன். அப்புறம் நான் வளர்ந்து பாபா படத்துல ரஜினி சாருக்கு பிஆர்ஓ வா ஒர்க் பண்ணுனேன்.
அவருக்கிட்ட நான் ஒரு 5 வருடம் வேலை செய்தேன். வெற்றிகளை அவமானங்களும், துரோகங்களையும் தாண்டித் தான் ஜெயிக்கணும்கறதை பாட்ஷா படம் கொடுத்தது. ஆரம்பத்துல இருந்தே நான் நடிகர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டது இல்லை.
மேற்கண்ட தகவலானது திரை விமர்சகர் சித்ரா லெட்சுமணன் பேட்டி கண்டபோது நிகில் முருகன் பகிர்ந்து கொண்டவை.
