Categories: Cinema History Cinema News latest news

நம்பிக்கை இல்லாமல் இயக்குனர் கொடுத்த வாய்ப்பு… பாட்டெல்லாம் செம ஹிட்!.. மாஸ் காட்டிய வித்யாசாகர்!..

90ஸ் கிட்ஸ்களின் விருப்பமான இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் வித்யாசாகர். பள்ளி பருவங்களில் பலரும் அவரது பாடல்களை பாடியிருப்போம். வித்யாசாகர் தமிழ் சினிமாவில் புது விதமான இசையை அறிமுகப்படுத்தியவர் வித்யாசாகர்.

இசையமைப்பாளர் தேவாவை போலவே வித்யாசாகர் பாடல்களும் மிகவும் வேகமாக செல்லக்கூடியதாக இருக்கும். அவர் இசையமைத்த பாடல்களில் தூள், சந்திரமுகி, அன்பே சிவம் போன்ற பல பாடல்கள் பிரபலமானவை. இந்த நிலையில் கில்லி திரைப்படத்தில் இசையமைப்பதற்கான வாய்ப்பை பெற்றார் வித்யா சாகர்.

தெலுங்கில் வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்த ஒக்கடு திரைப்படத்தைதான் தமிழில் கில்லி என படமாக்க இருந்தார் இயக்குனர் தரணி. தெலுங்கில் ஏற்கனவே 2 பாடல்கள் பெரும் ஹிட் கொடுத்திருந்தன. அந்த பாடல்களையே தமிழிலும் வைத்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார் தரணி.

ஹிட் கொடுத்த வித்யாசாகர்:

அதற்கு பதிலளித்த வித்யாசாகர்.. இல்ல சார் அது தெலுங்கு பாட்டு நாம தமிழிற்கு புதிதாக பாட்டு போட்டுக்கலாம். என கூறியுள்ளார். தெலுங்கை விட சிறப்பாக தமிழில் பாடல் போட முடியுமா என சந்தேகமாக இருந்துள்ளது இயக்குனர் தரணிக்கு.

எனவே யோசனையுடனேயே வித்யாசாகருக்கு அவர் வாய்ப்பு கொடுத்துள்ளார். அந்த படம் வெளியாகி படமும் தெலுங்கை விட பெரும் ஹிட் கொடுத்தது. பாடலும் தெலுங்கை தாண்டி பெரிய ஹிட் கொடுத்தது. அதிலும் அர்ஜுனரு வில்லு, அப்படி போடு பாடல்கள் எல்லாம் பெரும் ஹிட் கொடுத்தன. இந்த விஷயத்தை வித்யாசாகர் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: பாபா படத்தில் பாபாஜியாக நடித்த நடிகர் இவர்தான்? டபுள் பேமண்டு கொடுத்து குஷி படுத்திய ரஜினிகாந்த்!

Published by
Rajkumar