சூர்யாவா? ரன்வீரா? ஷங்கருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே நடக்கும் மோதல்… ஒரு முடிவுக்கு வாங்கப்பா!!
தமிழின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர், தற்போது கமல்ஹாசனை வைத்து “இந்தியன் 2” திரைப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் தெலுங்கில் ராம் சரணை வைத்து ஒரு புதிய திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் ஷங்கர் “வேள்பாரி” நாவலை திரைப்படமாக உருவாக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளிவந்தது. மேலும் இத்திரைப்படத்தில் சூர்யா, வேள்பாரியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
சு. வெங்கடேசன் எழுதிய “வேள்பாரி” நாவல், சங்ககால மன்னரான பாரியுடன் சேர சோழ பாண்டிய அரசர்கள் போர் புரிந்த வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு புனைவு நாவல் ஆகும். “பொன்னியின் செல்வன்” நாவலை போலவே “வேள்பாரி” நாவலும் அதிக பிரதிகள் விற்பனையான நாவல்தான்.
இந்த நிலையில் ஷங்கர் இந்த நாவலை திரைப்படமாக உருவாக்க உள்ளதாகவும், இத்திரைப்படத்திற்கு 1000 கோடி பட்ஜெட் எனவும் தகவல்கள் வெளிவந்தன.
ஆனால் இத்திரைப்படத்தில் வேள்பாரியாக ரன்வீர் சிங் நடிக்க உள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. அதாவது “வேள்பாரி” திரைப்படம் ஒரு பேன் இந்திய திரைப்படமாக உருவாக்க ஷங்கர் திட்டமிட்டிருப்பதாகவும், ஆதலால் பாலிவுட்டின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங்கை ஷங்கர் அணுகியதாகவும் கூறப்படுகிறது.
எனினும் இதனிடையே மற்றொரு தகவலும் வெளிவந்தது. அதாவது “வேள்பாரி” திரைப்படத்தை ஹோம்பாலே நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், அதில் யாஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன. ஆனால் பெரும்பாலும் ரன்வீர் சிங்தான் இத்திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் நந்தினிக்கு பின்னணி குரல் கொடுத்தது இந்த சின்னத்திரை நடிகைதான்?? என்னப்பா சொல்றீங்க!!
இந்த நிலையில் “வேள்பாரி என்பது தமிழர் வரலாற்றுச் சார்ந்த கதை. அதற்கு ஒரு தமிழ் முகம்தான் தேவை. ஆதலால் இத்திரைப்படத்தில் சூர்யாவை நடிக்க வைக்க வேண்டும்” என ஷங்கர் உறுதியோடு இருக்கிறாராம். ஆனால் “பேன் இந்தியா திரைப்படம் என்றால் ரன்வீர் சிங்தான் சிறப்பாக இருப்பார்” என்று தயாரிப்பு நிறுவனம் கூறுகிறதாம். இவ்வாறு ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே “வேள்பாரி” கதாநாயகர் குறித்த கருத்து மோதல் ஏற்பட்டு வருவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.