இயக்குனர் பி.வாசுவை வச்சி ஒரு குப்பை படம் தயாரிச்சேன்!.. அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர்!..

by Rajkumar |   ( Updated:2023-07-01 08:49:24  )
இயக்குனர் பி.வாசுவை வச்சி ஒரு குப்பை படம் தயாரிச்சேன்!.. அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர்!..
X

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக இயக்குனராக தங்களது கால் தடத்தை சினிமாவில் பதித்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பி வாசு. 1981 ஆம் ஆண்டு வந்த பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு பல திரைப்படங்களின் வாய்ப்புகள் கிடைத்தது. தமிழ் சினிமாவில் பி.வாசு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இளையராஜா குறைந்த பட்ஜெட்டில் படம் எடுத்த பி.வாசுவிற்கு அப்பொழுது இலவசமாக இசையமைத்து கொடுத்தவர் இளையராஜா.

p vasu1

p vasu1

ஏனெனில் அப்போது இளையராஜாவின் பாடல்களுக்கு ஒரு வரவேற்பு இருந்தது. ஆனால் அதிக காசு கொடுத்தால்தான் இளையராஜாவிடம் இசையை வாங்க முடியும் என்கிற சூழ்நிலை இருந்தது. இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி இளையராஜா பி.வாசு போன்ற சிலருக்கு இசையமைத்து கொடுத்துள்ளார்.

பி வாசுவின் குப்பை படம்:

சின்ன தம்பியில் துவங்கி பல ஹிட் படங்களை கொடுத்த பி வாசு ரஜினியை வைத்து சந்திரமுகி என்ற திரைப்படத்தை இயக்கினார். அவரை குறித்து தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் ஒரு பேட்டியில் கூறும்பொழுது என் தயாரிப்பில் ஒரு குப்பை படத்தை எடுத்தார் பி.வாசு என கூறியுள்ளார்.

சீனு என்கிற அந்த படம் 2000 ஆம் ஆண்டு வெளியானது. அதில் பி.வாசுவே இயக்கி நடித்திருந்தார். அதில் கார்த்தி கதாநாயகனாக நடித்திருந்தார். அப்போது அந்தப் படத்திற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை ஆனால் இப்பொழுது சின்னத்திரையில் அந்த திரைப்படம் ஓடும் பொழுது மக்கள் மத்தியில் அந்த படத்திற்கு ஒரு வரவேற்பு இருப்பதை பார்க்க முடிகிறது என கூறியுள்ளார் மாணிக்கம் நாராயணன்

இதையும் படிங்க: மாமன்னன் படம் பார்த்து கமல் சொன்னது இதுதான்!. மாரி செல்வராஜ் பகிர்ந்த சீக்ரெட்…

Next Story