தமிழில் வந்த ஹிட் படத்தை, டொக்கு படமாக்கிய சரத்பாபு மனைவி!.. மொத்த காசும் காலி!..

Published on: May 31, 2023
---Advertisement---

1978 ஆம் ஆண்டு வெளிவந்த நிழல் நிஜமாகிறது திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் சரத்பாபு. சரத்பாபுவிற்கு அது முதல் படமாக இருந்தாலும் அதற்கு பிறகு வந்த முள்ளும் மலரும் திரைப்படம்தான் அவருக்கு முக்கிய படமாக அமைந்தது.

இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் சரத்பாபுவிற்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. அதற்கு பிறகு அதிக பட வாய்ப்புகளை பெற துவங்கினார் சரத்பாபு.

அதற்கு முன்பு தெலுங்கு சினிமாவில் நடித்து வந்தா சரத்பாபு. அந்த சமயத்தில் அவரது முதல் மனைவியான ரமா பிரபாவை சந்திப்பதற்கான வாய்ப்பை பெற்றார் சரத்பாபு. ரமாபிரபா ஏற்கனவே தெலுங்கில் பிரபலமான நடிகையாக இருந்தார். தமிழில் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த உத்தரவின்றி உள்ளே வா என்கிற திரைப்படத்தை தெலுங்கில் படமாக்க நினைத்தார்.

ஏனெனில் அந்த படம் தமிழில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. எனவே தெலுங்கில் அந்த படத்த ரமாவே தயாரித்தார். அதில் கதாநாயகனாக சரத்பாபு நடித்தார். ஆனால் வெளியான முதல் நாளே படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இரண்டாவது நாள் தியேட்டருக்கே ஆள் வரவில்லை.

Sarath Babu
Sarath Babu

படம் படு தோல்வி அடைந்தது. சம்பாதித்த மொத்த பணத்தையும் அந்த படத்தில் போட்டிருந்த ரமாபிரபா இதனால் உடைந்துபோனார். அப்போது சரத்பாபுதான் அவருக்கு ஆறுதலாக இருந்துள்ளார். அதுவே அவர்களுக்குள் காதல் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: கன்னட சினிமாவில் மொக்கையா நடிச்சிட்டு இருந்தேன்!. நடிகை வாழ்க்கையை மாற்றி அமைத்த பாலசந்தர்!..

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.