எஸ்.ஏ.சிக்கும் முருகதாஸுக்கும் நடந்த சண்டை… கைமாறிப்போன விஜய் பட புராஜெக்ட்…

AR Murugadoss
விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய்யின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றியவர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்திருப்பார்கள். விஜய் தற்போது ரசிகர்களின் தளபதியாக வளர்ந்திருக்கிறார் என்றால் எஸ்.ஏ.சியின் முயற்சி ஒரு முக்கிய காரணம்.

எஸ்.ஏ.சி தொடக்கத்தில் விஜய்யை வைத்து பல திரைப்படங்களை தயாரித்து இயக்கினார். அதன் பின் விஜய் மிகப் பெரிய ஹீரோவாக வளர்ந்த பிறகு எஸ்.ஏ.சி விஜய்யை வைத்து திரைப்படங்களை இயக்கவில்லை. எனினும் விஜய் நடித்த “துப்பாக்கி” திரைப்படத்தை முதலில் எஸ்.ஏ.சந்திரசேகர்தான் தயாரிப்பதாக இருந்தது. எனினும் பின்னாளில் அந்த புராஜெக்ட் கலைப்புலி எஸ்.தாணு கைகளுக்கு சென்றுவிட்டது. இந்த நிலையில் “துப்பாக்கி” திரைப்படம் கலைப்புலி எஸ்.தாணு கைகளுக்கு எவ்வாறு சென்றது என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய், காஜல் அகர்வால் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “துப்பாக்கி”. இத்திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். கலைப்புலி எஸ்.தாணு இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
விஜய்யின் கேரியரில் “துப்பாக்கி” திரைப்படம் மிகவும் முக்கிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம். இதில் இடம்பெற்ற ஆக்சன் காட்சிகள் ரசிகர்களை பெருவாரியாக ஈர்த்தது. இதில் இடம்பெற்ற “ஐ எம் வெயிட்டிங்” என்ற வசனம் மிகவும் புகழ்பெற்ற வசனம் ஆகும்.

இத்திரைப்படத்தை முதலில் எஸ்.ஏ.சந்திரசேகர்தான் தயாரிப்பதாக இருந்தார். ஆனால் ஏ.ஆர்.முருகதாஸிற்கும் எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே பல கருத்து முரண்கள் ஏற்பட்டதாம். ஆதலால்தான் இத்திரைப்படம் கலைப்புலி எஸ்.தாணு கைக்கு சென்றிருக்கிறது.