Connect with us
vijayakanth

Cinema History

விஜயகாந்துக்கு 18 பட வாய்ப்புகளை வாங்கி கொடுத்த தோல்வி படம்!.. அட ஆச்சர்யமா இருக்கே!..

Vijayakanth: சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது என்பது குதிரை கொம்புதான். அதுவும் ஹீரோ வாய்ப்பு என்பது அவ்வளவு சுலபத்தில் கிடைத்துவிடாது. சினிமா பின்னணி இருந்தால் அது கொஞ்சம் சுலபம். எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவில் நடிக்க முயன்றால் வாய்ப்புகள் எளிதில் கிடைத்துவிடாது.

அதோடு, பல அவமானங்களை சந்திக்க வேண்டியிருக்கும். கலர் இல்லை, அழகு இல்லை, நல்ல உடல்வாகு இல்லை என பல காரணங்களை சொல்லி அசிங்கப்படுத்துவார்கள். அதையெல்லாம் தாண்டி தாக்குபிடித்து போராடினால்தான் வாய்ப்புகள் கிடைக்கும். விஜயகாந்தும் சினிமாவில் நடிக்க முயற்சி எடுத்தபோது இது எல்லாவற்றையும் சந்தித்தார்.

இதையும் படிங்க: வடிவேலு இல்ல.. பொடிவேலு!.. இவ்ளோ வன்மம் இருக்க கூடாது.. பொளந்து கட்டிய இயக்குனர்

அதுதான் ஒரு ரஜினிகாந்த் இருக்கிறாரே… எதற்கு நீ விஜயகாந்த்.. என அவரிம் கேட்டனர். உன்னுடைய தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லை என சொன்னார்கள். ஆனாலும் போராடி இனிக்கும் இளமை படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். ஆனால், அந்த படம் ஓடவில்லை.

vijayakanth

பொதுவாக ஒரு நடிகருக்கு ஒரு வெற்றிப்படம்தான் பல பட வாய்ப்புகளை பெற்றுத்தரும். ஆனால், விஜயகாந்துக்கு அவர் நடிப்பில் வெளிவந்த ஒரு தோல்விப்படம் பல படங்களின் வாய்ப்பை வாங்கி கொடுத்தது என்றால் அது நம்ப முடிகிறதா?.. ஆனால் உண்மையில் அவரின் வாழ்க்கையில் அப்படி நடந்தது.

1980ம் வருடம் விஜயகாந்தின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘நீரோட்டம்’. இந்த படம் சென்னை தி.நகரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தபோது தயாரிப்பாளர் வடலூர் கம்பைன்ஸ் சிதம்பரம் இப்படத்தை சென்று பார்த்தார். அவருக்கு விஜயகாந்தை பிடித்துவிட்டது. இவரை வைத்து ஒரு படம் எடுப்போம் என்கிற எண்ணமும் தோன்றியது.

இதையும் படிங்க: ஒரே படம்!.. ஓவர் நைட்டில் ஒபாமா ஆன 5 நடிகைள்.. சும்மா கொட்டுது கோடி!..

ஆனால், அவருக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்கள் ‘அவரை வைத்து படமெடுத்தால் ஓடாது. வேண்டாம்’ என சொன்னார்கள். நீரோட்டம் படமும் ஓடவில்லை. ஆனாலும், சிதம்பரம் தனது எண்ணத்தை மாற்றிக்கொள்ளவில்லை. எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்கிற படத்தை தயாரித்தார். விஜயகாந்த் ஹீரோவாக நடித்த இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.

இந்த படத்தின் வெற்றியால் 18 படங்களில் ஒப்பந்தம் ஆனார் விஜயகாந்த். ஆனால், கதை,இயக்குனர் என அலசி ஆராயாமல் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நடித்ததால் அதில் பல படங்கள் ஓடவில்லை. அதனால், விஜயகாந்த் மார்க்கெட் மீண்டும் கீழே போய்விட்டது. அதன்பின் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் மீண்டும் அவர் நடித்த ‘சாட்சி’ திரைப்படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

இதையும் படிங்க: பிடிக்காம நடிச்ச படம்!.. ஆனா படம் பார்த்துவிட்டு தேம்பி தேம்பி அழுத சிம்ரன்!..

google news
Continue Reading

More in Cinema History

To Top