ரஜினிக்கும், அஜித்துக்கும் முதல் பெண் ரசிகை யார் தெரியுமா?!.. கேட்டா ஆச்சர்யப்படுவீங்க!...

by சிவா |   ( Updated:2023-08-29 03:45:34  )
rajini ajith
X

சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. திரைப்பட பின்னணி இருந்தால் மட்டுமே சுலபமாக வாய்ப்பு கிடைக்கும். இல்லையெனில் போராட வேண்டும். சினிமா கம்பெனிகளில் ஏறி இறங்க வேண்டும். தயாரிப்பாளர்களையும், இயக்குனர்களையும் தேடிப்போய் வாய்ப்பு கேட்க வேண்டும். அதுவும் ஹீரோவாக வாய்ப்பு கிடைக்க வேண்டுமெனில் எல்லாம் சரியாக அமைய வேண்டும்.

அதேபோல், நடிகர், நடிகைகளுக்கு ரசிகர், ரசிகைகள் என்பது மிகவும் முக்கியம். அவர்களால்தான் நடிகர்கள் வளர்கிறார்கள், புகழின் உச்சிக்கும் போவார்கள், சொகுசு பங்களாவில் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள். ஒரு நடிகருக்கு உள்ள ரசிகர்களின் எண்ணிக்கைதான் அவரின் சினிமா வாழ்வையே தீர்மானிக்கும். படம் பார்க்கும் ரசிகனால் ஒரு நடிகன் கவனிக்கப்பட்டால்தான் அந்த நடிகரின் சினிமா வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு நகரும். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் என எல்லா நடிகர்களுக்கும் இது பொருந்தும்.

இதையும் படிங்க: விடாமுயற்சிக்கு அஜித் வைத்த காலக்கெடு!.. அது நடக்கலனா நடக்க போவது இதுதான்!..

நடிகர் ரஜினிக்கு இப்போது கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தியா மட்டுமல்லாமல் ஜப்பானில் கூட அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரின் படம் வெளியாகும் போது சென்னை வந்து அவர்கள் படம் பார்க்கிறார்கள். ஆனால், அதே ரஜினிக்கு முதல் ரசிகர்/ரசிகை ஒரு சிறுமிதான் என்றால் நம்ப முடிகிறதா?!.

பாலச்சந்தர் இயக்கத்தில் ‘அபூர்வ ராகம்’ படத்தில் அறிமுகமான ரஜினி அந்த படம் ஓடிய ஒரு தியேட்டரின் முன்பு தன்னை யாருக்காவது அடையாளம் தெரிகிறதா என பார்ப்பதற்காக ஏக்கத்துடன் நின்று கொண்டிருந்தாராம். யாரும் அவரை கண்டுகொள்ளவே இல்லை. அப்போது ஒரு எட்டு வயது சிறுமி மட்டும் அருகில் இருந்து ‘அங்கிள் நீங்கதான அந்த கேட்ட திறந்துவிட்டு நடந்து வருவீங்க’ என கேட்க ரஜினிக்கு மிகவும் சந்தோஷத்துடன் அந்த சிறுமிக்கு கை கொடுத்தாராம்.

இதையும் படிங்க: விஜய், அஜித் ஒருதடவ கூட அத சொன்னதில்லை!.. ரஜினி அதுல கிரேட்… உருகும் தேவா!…

அதேபோல், நடிகர் அஜித் அமராவதி படத்தில் நடித்துவிட்டு அடுத்து சில படங்களில் நடித்தார். அதன்பின் கல்லூரி வாசல் என்கிற படத்தில் நடிப்பதற்காக ஊட்டி செல்வதற்காக கோவை ரயில் நிலையத்தில் காத்திருந்தாராம். அங்கிருந்து அவரை அழைத்துசெல்ல கார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அங்கே வந்த ஒரு சிறுமி ‘அங்கிள் நீங்கதான அஜித் குமார்?’ என கேட்க, அஜித் ‘ அது நான்தான். என்னம்மா விஷயம்?’ என கேட்க, ‘அங்கே ஒருத்தர் உங்க பேர ஒரு போர்ட்ல எழுதிட்டு அங்க நின்னுக்கிட்டு இருக்கார்’ என சொல்ல அஜித்தோ ‘தேங்க் யூ’ என சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல முயன்றார்.

அப்போது அந்த சிறுமி ‘அங்கிள் அந்த ‘தாஜ்மஹால் தேவையில்லை’ பாட்டுல நல்லா நடிச்சிருந்தீங்க’ என சொல்ல, அஜித் மிகவும் சந்தோஷப்பட்டு அந்த சிறுமிக்கு நன்றி சொன்னாராம். அந்த பாடல் அஜித் அறிமுகமான அமராவதி படத்தில் இடம் பெற்றிருந்தது. மொத்தத்த்தில் ரஜினிக்கும், அஜித்துக்கும் ஒரு சிறுமிதான் முதல் ரசிகையாக இருந்துள்ளனர் என்பது ஆச்சர்யம்தான்.

இதையும் படிங்க: நயனை கெஞ்ச வச்ச பாவம்… லைகாவிடம் கெஞ்சுகிறாரா அஜித்… விடாமுயற்சி சர்ச்சை!

Next Story