லோகேஷ் கனகராஜ் செய்த காரியத்தால் இந்தியாவில் இருந்தே காணாமல் போன திரைப்படம்… அப்போ அது உண்மைதானோ?
லோகேஷ் கனகராஜ்ஜின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகியாக த்ரிஷா நடித்து வருகிறார். மேலும் பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மேத்யூ, அர்ஜூன், சஞ்சய் தத் போன்ற பலரும் நடித்து வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இதற்கு முன் விஜய்யை வைத்து இயக்கிய “மாஸ்டர்” திரைப்படம் வேற லெவலில் ஹிட் அடித்தது. இதன் காரணத்தால் “லியோ” படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. “லியோ” திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான அந்தணன், தனது வீடியோ ஒன்றில் “லியோ” திரைப்படம் குறித்தான முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது ஆங்கிலத்தில் வெளியான “ஏ ஹிஸ்ட்ரி ஆஃப் வைலன்ஸ்” திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் எப்போதும் காணக்கிடைக்கும். ஆனால் தற்போது அத்திரைப்படத்தை இந்தியாவிற்குள் யாரும் காண முடியாதபடி அமேசான் பிரைம் நிறுவனம் மாற்றியுள்ளது. இதனை வைத்து பார்த்தால் “ஏ ஹிஸ்ட்ரி ஆஃப் வைலன்ஸ்” திரைப்படத்தின் ரீமேக் உரிமத்தை “லியோ” படக்குழுவினர் வாங்கியிருப்பதாக தெரியவருகிறது என்று அந்தணன் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.
“லியோ” திரைப்படம் “ஏ ஹிஸ்ட்ரி ஆஃப் வைலன்ஸ்” திரைப்படத்தின் ரீமேக் என ஏற்கனவே அரசல் புரசலாக பல பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த நிலையில் தற்போது அந்தணன் கூறியுள்ள செய்தி, அந்த பேச்சுக்கள் எல்லாம் உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறது.
இதையும் படிங்க: இளையராஜாவை கண்டபடி திட்டிய கண்ணதாசன்.. எல்லாத்துக்கும் காரணம் எம்.எஸ்.விதான்!..