ஆறே நாள் ஓடி அட்டு ப்ளாப் அடித்த படம்… ஆனால் பாட்டு மட்டும் செம ஹிட்டு – எந்த படம் தெரியுமா?

by Rajkumar |
ஆறே நாள் ஓடி அட்டு ப்ளாப் அடித்த படம்… ஆனால் பாட்டு மட்டும் செம ஹிட்டு – எந்த படம் தெரியுமா?
X

enga oor rasathi

இளையராஜா காலக்கட்டத்தில் இருந்து இப்போது வரை படம் சரியான ப்ளாப் வாங்கிய படமாக இருந்தாலும் படத்தின் பாடல்கள் நன்றாக இருக்கும் பட்சத்தில் பாடல்கள் மட்டும் நல்ல ஹிட் கொடுத்துவிடும். இப்படியாக வலம் வரும் பாடல்கள் என்ன படத்தில் வரும் என்பதே மக்களுக்கு தெரியாமல் இருக்கும்.

ஆனாலும் தினமும் அந்த பாடலை கேட்டுக்கொண்டிருப்பர். ஆனால் வெறும் ஆறே நாள் மட்டும் ஓடிய ஒரு படத்தின் பாடல் இப்போது வரை மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. இதுக்குறித்து பாடலாசிரியர் முத்துலிங்கம் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

ilai

ilayaraja

ஆறு நாள் ஓடிய தமிழ் படம்:

1980 களில் இயக்குனர் என்.எஸ் ராஜேந்திரன் மற்றும் பி.கலைமணி இயக்கத்தில் எங்க ஊரு ராசாத்தி என்கிற திரைப்படம் வெளியானது. அந்த சமயத்தில் நடிகர் சுதாகர் சற்று பிரபலமான நடிகராக இருந்து வந்தார். எனவே அந்த படத்தில் நடிகர் சுதாகரை கதாநாயகனாக நடிக்க வைத்தனர்.

நடிகை ராதிகா அந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தமிழில் பெரும் இசையமைப்பாளர்களான கங்கை அமரன், இளையராஜா இருவருமே இந்த படத்திற்கு இசையமைத்திருந்தனர். ஆனால் இந்த படம் வெளியான பிறகு அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை.

வெளியான ஒரு வாரத்திற்க்குள்ளாகவே பல திரையரங்குகளில் இந்த படத்தை எடுத்துவிட்டனர். ஆனால் அந்த படத்தில் வந்த பொன்மான தேடி நானும் பூவோட வந்தேன் என்கிற பாடல் மட்டும் எதிர்பார்த்ததை விடவும் அதிக ஹிட் கொடுத்தது. அப்போது இருந்த இலங்கை எஃப்.எம் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு அந்த பாடலை தினமும் ஒலிப்பரப்பியிருக்கிறது.

Next Story