சினிமாவில் வில்லன், ஹீரோ, காமெடியன் என அனைத்து கதாபாத்திரத்திலும் கலக்கியவர் நடிகர் லிவிங்ஸ்டன். அவரை பலருக்கும் நடிகராக தெரியும். ஆனால் லிவிங்ஸ்டன் தமிழ் சினிமாவிற்கு வந்தபோது இயக்குனர் ஆக வேண்டும் என்கிற ஆசையில்தான் வந்தார்.
பாக்கியராஜ் படமான டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் துவங்கி பல படங்களில் நடித்துள்ளார் லிவிங்ஸ்டன். அதில் எம் புருஷன் குழந்தை மாதிரி, சொல்லாமலே போன்ற படங்கள் பிரபலமானவை. வில்லனாக குறிப்பிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த காலக்கட்டத்தில் பல கஷ்டங்களை அனுபவித்தார் லிவிங்ஸ்டன். அப்போதெல்லாம் திரைத்துறையில் வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிதான விஷயமாக இருந்தது. ஆனால் பாரதிராஜாவிடம் பாக்கியராஜ் பணிப்புரிந்து வந்த காலக்கட்டத்திலேயே அவருடன் பழக்கத்தில் இருந்தார் லிவிங்ஸ்டன்.
லிவிங்ஸ்டன் எடுத்த முடிவு:
பிறகு பாக்கியராஜ் வளர்ந்து பெரும் இயக்குனர் ஆனார். ஆனால் அப்போதும் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார் லிவிங்ஸ்டன். இந்த நிலையில் ஒரு நாள் பாக்கியராஜுடம் வந்த லிவிங்ஸ்டன் நான் தற்கொலை பண்ணிக்கலாம்னு இருக்கேன். என கூறினார்.
இதை கேட்டதும் பாக்கியராஜ்க்கு அதிர்ச்சியாக இருந்துள்ளது. ஏனெனில் அவர்கள் இருவரும் அவ்வளவு வருடம் பழக்கத்தில் இருந்தனர். ஏன் என பாக்கியராஜ் கேட்கும்போது ரொம்ப வருஷமா வாய்ப்பு தேடிட்டு இருக்கேன். வாய்ப்பே கிடைக்கலை அதான் என விரக்த்யாக கூறியுள்ளார் லிவிங்ஸ்டன்.
அதை பார்த்துவிட்டு பாக்கியராஜே அவருக்கு வாய்ப்பு கொடுத்து உதவி இயக்குனராக சேர்த்துக்கொண்டுள்ளார்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…