More
Categories: Cinema History Cinema News latest news

அந்த பக்கம் போயிடாதீங்க தலைவா… எம்.ஜி.ஆர் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென கத்திய பெண்மணி!!

சினிமா என்ற விஞ்ஞானம் உருவான காலகட்டத்தில் அதனை பார்த்து ரசிகர்கள் வியந்துப்போனாலும் அது ஒரு பயங்கரமான அனுபவமாகவும் இருந்தது. அந்த காலகட்டத்தில் இருந்த மக்கள் சினிமாவில் வருவதெல்லாம் உண்மை என்று நம்பினார்கள்.

உலகின் முதல் அசையும் படத்தை எடுத்தவர்களான லூமியர் பிரதர்ஸ், அந்த திரைப்படத்தை 1896 ஆம் ஆண்டு ஒரு நாள் மக்களுக்கு திரையிட்டுக் காட்டினார்கள். ஒரு ரயில், ஸ்டேஷனுக்குள் நுழைவதை படம் பிடித்த லூமியர் பிரதர்ஸ் அந்த படத்தை “தி அர்ரைவல் ஆஃப் ஏ டிரைன்” என்று பெயரிட்டனர்.

Advertising
Advertising

Arrival Of A Train

வெறும் 50 விநாடிகள் நீளம் கொண்ட அத்திரைப்படத்தை பார்த்த பார்வையாளர்கள், நிஜ ரயில் நம் மீது மோத வருவதாக நினைத்து அலறிக்கொண்டு ஓடினார்களாம்.

மௌனத் திரைப்படங்களில் இருந்து புராணத் திரைப்படங்கள், சமூக திரைப்படங்கள் என வளர்ச்சியடைந்த சினிமா வெவேறு பரிணாமங்களை கடந்து இன்று வந்தடைந்திருக்கிறது. ஆனாலும் சினிமா ஏற்படுத்தக்கூடிய தாக்கம் என்பது ஒன்றாகத்தான் இருக்கிறது.

இப்போதும் சினிமாவில் வரும் நடிகர்களை கடவுளாக பார்ப்பதும், தலைவராக பார்ப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், என்.டி.ராமாராவ் ஆகியோருக்கு அரசியலில் அதிகளவு ஆதரவு கிடைத்ததற்கு சினிமாக்களே முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. இந்த நிலையில் எம்.ஜி.ஆர், திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது அவருக்கு நடந்த ஒரு சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.

Thiudathey

1961 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், சரோஜா தேவி, நம்பியார் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “திருடாதே”. இத்திரைப்படம் வெளிவந்தபோது சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் எம்.ஜி.ஆரும், நம்பியாரும் இணைந்து அத்திரைப்படத்தை காணச் சென்றிருக்கின்றனர். அப்போது அத்திரைப்படத்தில் ஒரு காட்சியில் மாடிப்படிக்கு அருகில் ஒளிந்துகொண்டிருக்கும் வில்லன் நம்பியாரை எம்.ஜி.ஆர் தேடிச் செல்வார்.

MGR and M.N.Nambiar

அந்த காட்சித் திரையில் வந்தபோது திரையரங்கில் ஒரு பெண்மணி, “மாடிப்படி பக்கம்  போயிடாதீங்க. அங்க அந்த கொலைகாரன் நம்பியார் இருக்கான். உங்களை கொலை பண்ணிடுவான்” என கத்தினாராம்.

அந்த காலகட்டத்தில் நம்பியார் நிஜமாகவே மிகவும் கெட்டவர் என்று ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். நம்பியார் வெளியூர்களுக்கு பயணம் செல்லும்போது கிராமத்தில் இருக்கும் மக்கள் அவரை பார்த்து “எம்.ஜி.ஆர்கிட்ட மோதுற வேளை எல்லாம் வச்சிக்காத. இனிமே எம்.ஜி.ஆர் மேல கை வச்சா அவ்வளவுதான்” என மிரட்டுவார்களாம்.

இதையும் படிங்க: பேரரசு தம்பிக்கு கிடைத்த விஜய் பட வாய்ப்பு… இயக்குனரை பற்றி தவறாக வத்தி வைத்த நண்பர்கள்… ஓஹோ இதுதான் விஷயமா?

Published by
Arun Prasad

Recent Posts