ரிலீஸ் ஆன உடனே உங்க வீட்டுக்குதான் வருவேன்!. மைக் மோகனிடம் சொன்ன சிறைக்கைதி!..
பெங்களூரை சேர்ந்த மோகன் தமிழ் பாலுமகேந்திரா இயக்கிய கோகிலா என்கிற கன்னட படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் மூடுபனி, நெஞ்சத்தை கிள்ளாதே, கிளிஞ்சல்கள் ஆகிய படங்கள் மூலம் பிரபலமானார். 80களில் முக்கியமான ஹீரோக்களில் ஒருவராக இருந்தார் மோகன்.
இவரின் பெரும்பாலான படங்கள் வெள்ளி விழா படங்களாக அமைந்தது. ஒருகட்டத்தில் ரஜினி, கமலுக்கு டஃப் கொடுக்கும் நடிகராக மோகன் மாறினார். தொடர்ந்து இவரின் படங்கள் ஹிட அடித்தது. அதற்கு முக்கிய காரணம் இவரின் படங்களில் இடம் பெற்ற பாடல்கள்தான். இளையராஜாவின் இசையில் அத்தனை பாடல்களும் இனிமையாக அமைந்தது.
இதையும் படிங்க:விஜயகாந்துடன் 8 முறை மோதிய மைக் மோகன் படங்கள்!.. ஜெயிச்சது யாரு தெரியுமா?..
மணிவண்ணனின் இயக்கத்தில் கோபுரங்கள் சாய்வதில்லை, 24 மணி நேரம், அம்பிகை நேரில் வந்தாள், தீர்த்தக்கரையினிலே என சில படங்களில் நடித்திருக்கிறார் மோகன். அப்போதுதான் ஹாலிவுட்டில் வெளிவந்த கிரைம் திரில்லர் படம் ஒன்றை தமிழுக்கு ஏற்றது போல் கொஞ்சம் மாற்றி ஒரு கதையை உருவாக்கினார் மணிவண்ணன். அதுதான் நூறாவது நாள் திரைப்படம்.
இந்த படத்தில் மோகனுக்கு நெகட்டிவ் வேடம். ஹீரோவாக நடித்து வந்தாலும் இமேஜ் பற்றி கவலைப்படாமல் மணிவண்ணனுக்காக அந்த வேடத்தில் நடிக்க மோகன் ஒத்துக்கொண்டார். நளினி கதாநாயகனாக நடிக்க மிரட்டும் கதாபாத்திரத்தில் சத்தியராஜ் நடித்திருந்தார். வெள்ளை நிற பேண்ட், சிகப்பு நிற ஜர்க்கின், மொட்டைத்தலை, ரவுண்டு கண்ணாடி என சத்தியராஜின் தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அவரின் காட்சிகள் குறைவு என்றாலும் கைத்தட்டலை வாங்கினார் சத்தியராஜ். இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் விஜயகாந்தும் நடித்திருந்தார்.
தமிழில் அதுவரை இப்படி ஒரு கிரைம் திரில்லர் படத்தில் ரசிகர்கள் பார்த்தது இல்லை. ஒவ்வொரு காட்சியிலும் விசில் பறந்தது. மொத்தம் 12 நாட்களில் படத்தை எடுத்து முடித்தார் மணிவண்ணன். ஆச்சர்யப்பட்ட இளையராஜா தனது பங்குங்கு சிறப்பான பின்னணி இசையையும், பாடல்களையும் போட்டு கொடுத்தார்.
இதையும் படிங்க: விஜயகாந்துடன் 8 முறை மோதிய மைக் மோகன் படங்கள்!.. ஜெயிச்சது யாரு தெரியுமா?..
இந்த படத்தை பார்த்துவிட்டு தனது குடும்பத்தில் உள்ள 8 பேரை ஒருவன் கொலை செய்தான். இதுவே படத்திற்கு பெரிய விளம்பரமாகிப்போனது. அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது மோகன் அவரை பார்க்க சென்றிருந்தார். அப்போது, எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பேசிய அந்த கைதி ‘உங்களோட நூறாவது நாள் படம் பார்த்துட்டுதான் சார் இத்தனை கொலைகளையும் பண்ணேன். உங்க வீடு எங்க இருக்குன்னு எனக்கு தெரியும். ரிலீஸ் ஆன உடனே உங்க வீட்டுக்கு வரேன்’ என சொல்ல அதிர்ந்து போன மோகன் என்ன பேசுவது என்று தெரியாமல் புன்னகைத்துவிட்டு அங்கிருந்து போய்விட்டாராம்.
தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த கிரைம் திரில்லர் படங்களில் நூறாவது நாள் படத்திற்கு எப்போதும் ஒரு முக்கிய இடம் உண்டு.