எம்.ஜி.ஆர் - சிவாஜி படங்களை காலி செய்த பக்தி படம்!.. அட அப்பவே இது நடந்துருக்கா!…
திரையுலகில் சில சமயம் பெரிய நடிகர்களின் படங்களோடு வெளியாகும் ஒரு சிறிய பட்ஜெட் படம் அதிக வசூலை பெற்றுவிடும். ரசிகர்களை கவரும்படியான ஏதோ ஒரு அம்சம் அதில் கண்டிப்பாக இருக்கும்.
ஒருமுறை எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர் படங்களை விட ஒரு திரைப்படம் அதிக வசூல் செய்தது ஒரு படம் என்றால் நம்ப முடிகிறதா?.. ஆனால், அது உண்மையில் நடந்தது. 1971ம் ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளிக்கு பா. நீலகண்டன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் நீரும் நெருப்பும்.
அதேபோல், சிவாஜிக்கு பல வெற்றிப்படங்களை கொடுத்த ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் சிவாஜி நடித்து வெளியான திரைப்படம் பாபு. அதேபோல், டி.ஆர்.ராமன்னா இயக்கத்தில் ஜெய்சங்கர் நடித்து வெளியான திரைப்படம் வீட்டுக்கு ஒரு பிள்ளை. அதேநாளில் கே.எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெமினி கணேசன், ஜெயலலிதா மற்றும் முத்துராமன் ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம் ஆதிபராசக்தி.
ஆதிபராசக்தி திரைப்படம் எம்.ஜி.ஆரின் நீரும் நெருப்பும், சிவாஜியின் பாபு மற்றும் ஜெய்சங்கரின் நடிப்பில் வெளியான வீட்டுக்கு ஒரு பிள்ளை ஆகிய மூன்று படங்களை விடவும் அதிக வசூலை பெற்று சாதனை படைத்தது.
ஒருபடத்தின் மெகா வெற்றிக்கு ஹீரோவை விட கதையே முக்கியம் என அப்போதே உறுதியானது. ஆதிபராசக்தி ஒரு சாமி படமாகும். இந்த படத்தில் கடவுளாக கே.ஆர்.விஜயா நடித்திருப்பார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘ஆத்தாடி மாரியம்மா’, சொல்லடி அபிராமி ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.