Connect with us

தொடர் நஷ்டம்!.. கடனுக்கு பயந்து சொந்த ஊருக்கு மூட்டை கட்டிய தனுஷ் குடும்பம்..

kasthurai raja

Cinema History

தொடர் நஷ்டம்!.. கடனுக்கு பயந்து சொந்த ஊருக்கு மூட்டை கட்டிய தனுஷ் குடும்பம்..

சினிமாவை பொறுத்தவரை ஒருவரது வாழ்க்கை எப்போது மேலே போகும், எப்போது கீழே போகும் என கணிக்கவே முடியாது. ஒரு படத்தின் வெற்றியால் ஒருவரின் வாழ்க்கையே மாறிவிடும். அதேபோல், தோல்வி அதளபதாளத்தில் தள்ளிவிடும். இது பல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களின் வாழ்வில் நடந்துள்ளது. இயக்குனர் விசுவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து ராஜ்கிரனால் இயக்குனராக மாறியவர் கஸ்தூரி ராஜா. இவர் கிராம கதைகளை மட்டுமே திரைப்படமாக எடுப்பார். ஒருகட்டத்தில் தான் இயக்கும் படங்களை தயாரிக்கவும் துவங்கினார்.

kasthuri

kasthuri

அதில் அவருக்கு பல லட்சங்கள் நஷ்டம் ஏற்பட்டது. கடன்காரர்கள் அவரை நெருக்கவே, அவர்களுக்கு பயந்து இனிமேல் சென்னையே வேண்டாம், சொந்த ஊரான தேனிக்கு சென்றுவிடுவோம் என அவர் முடிவெடுத்தார். அப்போது அவரின் மகன் வெங்கட் பிரபு பிளஸ் ஒன் படித்துக்கொண்டிருந்தார். அவரின் மூத்தமகன் செல்வராகவன் இன்ஜினியரிங் முடித்துவிட்டு சினிமா இயக்குனராக வேண்டும் என்கிற ஆசையில் இருந்தார்.

thulluvatho

thulluvatho

குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்ல முயன்ற முடிவெடுத்த கஸ்தூரி ராஜாவிடம், அவரின் மகன் செல்வராகவன் ‘எனக்கு ஒரு 40 லட்சம் மட்டும் ரெடி பண்ணி கொடுங்கள். என்னிடம் ஒரு கதை இருக்கிறது. அந்த கதை மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அந்த கதை வெற்றிபெறும்’ என நம்பிக்கையாக கூற, துவக்கத்தில் தயங்கிய கஸ்தூரி ராஜா அவருக்கு சொந்தமாக இருந்த ஒரு வீட்டை விற்று அந்த பணத்தை கொடுத்துள்ளார். அதுதான் அவர்களிடமிருந்த கடைசி சொத்து. அப்படி உருவான திரைப்படம்தான் ‘துள்ளுவதோ இளமை’. இந்த படத்தில் யார் ஹீரோ என கஸ்தூரி ராஜா கேட்டதற்கு ‘பிரபுதான் ஹீரோ’ என்றாராம் செல்வராகவன். அவருக்கு தூக்கிவாறிப்போட்டது. ஆனாலும், செல்வராகவன் உறுதியாக இருந்தார்.

சினிமாவுக்காக வெங்கட் பிரபுவுக்கு ‘தனுஷ்’ என பெயர் வைக்கப்பட்டு படம் துவங்கப்பட்டது. புது இயக்குனர் என்றால் வினியோகஸ்தர்கள் படத்தை வாங்கமாட்டார்கள் என்பதால் இயக்கம் கஸ்தூரி ராஜா என டைட்டில் கார்டில் போடப்பட்டது. அந்த படம் வெளியாகி 2 காட்சிகள் வரவேற்பு இல்லை. ஆனால், மாலை காட்சியிலிருந்து அப்படம் பிக்கப் ஆகியது.

kasthuri raja

kasthuri raja

இப்போது போல் சோசியல் மீடியா அப்போது இல்லை. Mouth talk என சொல்லப்படும் வாய் வழியாக இப்படத்திற்கு விளம்பரம் கிடைத்து ரசிகர்கள் தியேட்டருக்கு வர துவங்கினர். படமும் சூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தில் சர்ச்சையான காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும் கஸ்தூரி ராஜாவுக்கு இப்படம் நல்ல லாபத்தை பெற்று தந்தது. இதையடுத்து சொந்த ஊருக்கு செல்லும் எண்ணத்தை கைவிட்டு சென்னையிலேயே அவரின் குடும்பம் செட்டில் ஆனது.

அதன்பின் தனுஷ் நடித்த காதல் கொண்டேன், திருடா திருடி ஆகிய படங்களும் ரசிகர்களை கவர்ந்து பெரிய ஹிட் அடிக்கவே கஸ்தூரி ராஜாவின் வாழ்க்கையே மாறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இனிமே மார்க்கெட்டு உனக்குதான்!.. சேலையில் சொக்கி இழுக்கும் லவ் டுடே இவனா…

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top