என்னை உருவாக்கியதே அந்த பாடல்தான்!.. பலவருடங்கள் கழித்து இசைஞானி இளையராஜா சொன்ன மேட்டர்!..

by சிவா |
ilayaraja
X

மதுரையை சேர்ந்த இளையராஜா துவக்கத்தில் சகோதரர்களுடன் சேர்ந்து நாடகம், கம்யூனிஸ்ட் கூட்டங்கள் உள்ளிட்ட பலவற்றுக்கும் இசையமைத்து வந்தனர். இளையராஜாவின் நண்பர் பாரதிராஜா இயக்குனராகும் ஆசையில் சென்னை வந்து ஒரு இடத்தில் தங்கி நாடகங்களை நடத்திகொண்டிருந்தார்.

அவருக்கு பின் இசையமைப்பாளராக வேண்டும் என்கிற ஆசையில் சென்னைக்கு சகோதரர்களுடன் வந்தார் இளையராஜா. பாரதிராஜாவுடன் தங்கி வாய்ப்பு தேடினார். சில படங்களில் வாய்ப்பு கிடைத்தாலும் பாடல் வெளிவராது. ஒருவழியாக அன்னக்கிளி படத்தில் வாய்ப்பு கிடைத்து டேக் ஆப் ஆனார்.

இதையும் படிங்க: யாருமே செய்யாத புதுமையை செய்து அசத்திய இளையராஜா!.. அட இதுதான் அந்தப் பாடலின் ரகசியமா?..

அந்த படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. அதன்பின் 20 வருடங்கள் அவரின் இசை ராஜாங்கம்தான். அவரின் இசையை நம்பியே பல படங்கள் உருவானது. படம் மொக்கையாக இருந்தாலும் இனிமையான பாடல்களை போட்டு படத்தை ஓட வைத்தார் இளையராஜா. பின்னணி இசையிலும் காட்சிகளுக்கு உயிர் ஊட்டினார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, மோகன், சத்தியராஜ் என 80களில் முன்னணி நடிகர்களின் படங்களின் வெற்றிக்கு கூட இளையராஜா தேவைப்பட்டார். அவருக்கு பின் ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, வித்யா சாகர், பரத்வாஜ், அனிருத் என பலர் வந்தாலும் ராஜாவின் இசையில் இருந்த அந்த ஈர்ப்பை யாராலும் இதுவரை கொடுக்கமுடியவில்லை என்பதுதான் நிஜம்.

இதையும் படிங்க: உற்சாகத்தில் இளையராஜா போட்ட மெட்டு…. இன்று வரை அதை முறியடிக்க பாடலே இல்லை…!

மனதை மயக்கும் பல பாடல்களை இளையராஜா உருவாக்கியிருந்தாலும் அவருக்குள் இசை தாகத்தை உருவாக்கியது யார் என்பது பற்றி அவரே ஒரு நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார். நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு நாள் தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது கம்பத்தில் கட்டப்பட்டிருந்த ஸ்பீக்கரில் ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான்’ பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.

அந்த பாடல்தான் என்ன இசைக்குள் இழுத்து சென்றது. அதன்பின்னர்தான் இசையை கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வமும் எனக்கு வந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், கண்ணதாசன் எழுதிய பாடல் அது. அப்போது அதுவெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால், எனக்குள் ஒரு பெரிய பாதிப்பை அந்த பாடல் ஏற்படுத்தியதுதான் உண்மை’ என அவர் சொல்லி இருக்கிறார்.

இதையும் படிங்க: தம்பிங்கறதுக்காக இப்படி எல்லாமா எழுத அனுமதிச்சார் இளையராஜா!… எந்தப் படத்தில் தெரியுமா?

Next Story