நடிகர் திலகத்தையே அசர வைத்த நடிகர்கள்… அட இவ்வளவு பேர் இருக்காங்களா?!…

Published on: April 7, 2024
sivaaji oakthevar
---Advertisement---

சினிமாவில் பொதுவாக கதாநாயகர்களுக்கு என ஒரு தனி இடம் ரசிகர்களின் மனதில் கொடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த படியாகத்தான் கதாநாயகிகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என பட்டியல் வரிசை படுத்தப்படலாம். நடிப்பு ஜாம்பவான்கள் பலரும் தமிழ் சினிமாவில் தங்களின் முத்திரையை பதித்த வரலாறும் உண்டு,

இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நடிகர்களாக இருந்த போதிலும் இவர்களுக்காகவே ரசிகர்கள் திரையரங்கிற்கு படையெடுக்கும் பழக்கத்தை தங்களது நடிப்பு திறமையால் உண்டு பண்ணியவர்களும் இருக்கின்றார்கள். அந்த வழியில் ‘காதல் மன்னன்’ என்ற புனைப்பெயரோடு வலம் வந்த ஜெமினி கணேசன், ஒரு முக்கிய இடத்தை பிடித்திருப்பார், கதாநாயகனாக மென்மையான நடிப்பினை அதிகமாக வெளிப்படுத்தி இருந்தாலும் இவரின் நடிப்பை ரசிக்க ஒரு கூட்டம் இருந்து வந்தது.

gemini
gemini

இவரைப்போலவே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி, எந்த கதாப்பாத்திரம் நடிக்க கொடுக்கப்பட்டாலும் அதற்கு தேவையான நடிப்பை கொடுத்தது, தனது பெயரையும் மேலோங்க செய்து படத்தினுடைய வெற்றிக்கான காரணிங்களில் முக்கிய பங்கும் வகித்து வந்தவர்

.குடும்பக்கதைகளில் அதிகமாக தோன்றிய இவரின் யதார்த்தமான நடிப்பு இவரை உற்று நோக்க வைத்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ரெங்காராவ், ஜெமினிகணேசன் படங்களின் படப்பிடிப்பு நடந்தாலோ, அல்லது இவர்களுடன் இணைந்து நடிக்க நேர்ந்தாலோ இவர்களது நடிப்பை நோக்கியும், அதனை பாராட்டும் பழக்கமும் கொண்டிருந்தாராம்.

renkarao
renkarao

ஆனால் இவர்களை விட சிவாஜி கணேசன் அதிகமா கண்காணிக்கும் நடிகராக இருந்தவர் ஓ.ஏ.கே. தேவர், தனது வாழ்நாளின் இறுதிவரை கதாநாயகனாக நடித்திராத இவர், மிக முக்கியமான கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து வந்தவர். கிட்டத்தட்ட இருநூறு படங்களுக்கு மேல் நடித்தும், மேடை நாடக கலைஞராக பரீட்சயமான இவர் “மாமன் மகள்”, என்கிற படத்தில் தான் அறிமுகமாகி உள்ளார் தமிழ் சினிமாவில்.

“மகாதேவி” , “தாய்க்குப்பின் தாரம்”, “உத்தமபுத்திரன்”, “கர்ணன்”, “வீரபாண்டிய கட்டபொம்மன்” போன்ற வெற்றிப்படங்களில் நடித்தவர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் பல படங்களில் நடித்த இவரின் தோறறத்தையும், இ வர் வசனம் பேசும் விதத்தை கண்டும் அசந்து போயி நிற்பாராம். அதனாலேயே சிவாஜியின் மனங்கவர்ந்த, அவரையே ஆச்சர்யப்படுத்திய மிக முக்கியமான நடிகராக இவர் பார்க்கப்பட்டாரம்.

Sankar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.