பாலத்தின் கீழே படுத்து தூங்கிய சமுத்திரக்கனி.. அங்கு வந்த போலீஸ் அதிகாரி.. என்ன நடந்தது தெரியுமா?..

by சிவா |
samuthirakani
X

சமுத்திரக்கனியை அறிவுரை சொல்லும் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் மற்றும் இயக்குனர் என்பதுதான் ரசிகர்களுக்கு தெரிந்த விசயம். ஆனால், அவர் இயக்குனராவதற்கு முன்பு எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது பலருக்கும் தெரியாது. உண்மையில் நடிகராக வேண்டும் என்கிற ஆசையில்தான் சமுத்திரக்கனி சென்னை வந்தார்.

Samuthirakani

Samuthirakani

நடிக்க வாய்ப்பு கேட்டு சென்று ஒரு இயக்குனரிடம் உதவியாளராக சேர்ந்தார். அதன்பின் பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்து அவர் தயாரித்த சீரியலை இயக்கும் வாய்ப்பு சமுத்திரக்கனிக்கு கிடைத்தது. அதன்பின் சில படங்களை இயக்கினார். ஆனால், அவை எதுவும் ஓடவில்லை. மீண்டும் சீரியலுக்கே சென்றார். அதன்பின் சசிக்குமாரின் அறிமுகம் கிடைத்து அவர் இயக்கி நடித்த ‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் நடித்தார். அதன்பின்னர்தான் இயக்குனராக வெற்றி பெற துவங்கினார் சமுத்திரக்கனி.

ஆனால், சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு அரை டவுசர் அணிந்து கொண்டு அப்பாவின் பாக்கெட்டில் இருந்து 130 ரூபாயை திருடிக்கொண்டு சென்னை வந்த சமுத்திரக்கனி எங்கு செல்வது என தெரியாமல் ஜெமினி பாலத்தின் கீழே படுத்து தூங்கியுள்ளார். இதுபற்றி ஒரு பேட்டியில் கூறியுள்ள சமுத்திரக்கனி ‘ஜெமினி பாலத்தின் கீழே படுத்து தூங்கிக்கொண்டிருந்தேன்.

அப்போது அங்கு ஒரு போலீஸ் அதிகாரி வந்து ‘இங்கெல்லாம் படுக்கக்கூடாது’ எனக்கூறி காவல் நிலையம் அழைத்து சென்று செய்திதாளை விரித்து கொடுத்து என்னை தூங்க சொன்னார். மறுநாள் காலை டீ வாங்கி கொடுத்தார். நான் என் சினிமா ஆசையை கூற ‘இப்போது நீ சினிமாவிலெல்லாம் நுழைய முடியாது.. ஊருக்கு போ’ என்றார். நானோ ‘தி. நகருக்கு செல்ல வழி மட்டும் சொல்லுங்கள்’ என்றேன். வழி சொல்லி என்னை அனுப்பி வைத்தார். அவரை நான் கடவுளாக பார்க்கிறேன். நான் இயக்குனராக வெற்றி பெற்ற பின் அவரை சந்திக்க முயன்றேன். ஆனால், முடியவில்லை’ என சமுத்திரக்கனி அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: நம்பியார் ஆடையை பார்த்ததும் ஷூட்டிங்கை நிறுத்திய எம்.ஜி.ஆர்.. எதற்காக தெரியுமா?..

Next Story